சிகரெட், பீடி விற்கப்படும் கடைகளில் சாக்லேட் விற்க மத்திய சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சாதாரண பெட்டி கடைகளில் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன. அதே கடைகளில் பிஸ்கட், குளிர்பானங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.


இதனால் குழந்தைகள் தங்களுக்கான பொருட்களை வாங்கச் செல்லும் போது கவர்ச்சி கவர் புகையிலைப் பொருட்களால் ஈர்க்கப்படுகிறார்கள் குழந்தைகள் இதன் விளைவாக சிறு வயதிலேயே புகையிலை பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.இதனால் பல்வேறு நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர்.


எனவே புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், குழந்தைகள் சம்பந்தமான பொருட்களை விற்க அனுமதிக்கக் கூடாது. என்று மத்திய சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.