Actor Amitabh Bachchan Longevity Secret: 20 மற்றும் 30களில் இருப்பவர்கள் பலரே, இப்போது “கை வலிக்கிது, கால் வலிக்குது...ஐய்யோ முதுகு பிடிக்கிது..” என கூறி வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ 90 வயதிலும் கூட முதுமையால் தளராமல் தங்களின் தினசரி வாழ்க்கையை எந்த சிரமமும் இன்றி எதிர்கொண்டு வரூகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதில் பலருக்கு நரைத்த முடி கூட அவ்வளவாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் வாழ்க்கை முறைகளும், உணவு பழக்கங்களும் காரணமாக இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

81 வயது அமிதாப் பச்சன்:


பாலிவுட் மட்டுமன்றி, இந்திய திரையுலகிற்கே மாபெரும் நடிகராக விளங்குபவர் அமிதாப் பச்சன். சுமார் 55 வருடங்களாக பாலிவுட்டில் ஜொலித்து வரும் இவர், இந்தி திரையுலகின் ஜாம்பவான் நடிகராக இருக்கிறார். இவருக்கு, தற்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் முதுமையால் வாடாமல் பல படங்களில் நடித்து வருகிறார். இவர், இத்தனை ஆண்டுகள் வாழ்வதற்கு பின்னால் இருக்கும் சீக்ரெட் என்ன? இங்கு பார்ப்போம்.


உடற்பயிற்சி:


அமிதாம் பச்சன், ஃபிட்னஸ் என்று வந்துவிட்டால் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக மாறி விடுவாராம். என்னதான் பிசியான நாளாக இருந்தாலும் அந்த நாளில் வர்க்-அவுட் செய்ய தவறாத நடிகர்களுள் ஒருவர் அமிதாப் பச்சன். இவரது தினசரி நடவடிக்கைகளுள் ஒன்று, சரியாக உடற்பயிற்சி செய்வதாகும். தினமும் வாக்கிங், யோகா, மிதமாம ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்கிறார். இவை அனைத்தும் அவரது இதய பாதுகாப்பை உறுதி செய்கின்றன.


தினசரி சாப்பிட வேண்டியவை:


டயட் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாத நபர், அமிதாப் பச்சன். புத்துணர்ச்சியூட்டும் பழங்கள், காய்கறிகளை தனது டயட்டில் சேர்த்துக்கொள்வாராம். அது மட்டுமன்றி, முழு தானியங்கள் மற்றும் மெல்லிய புரத உணவுகளும் இவர் டயட் லிஸ்டில் இருக்கிறது. தனது ஆரோக்கிய உணவு முறையை எந்த நாளாக இருந்தாலும் பின்பற்றும் அமிதாப், மொத்தமாக துரித உணவுகளை தவிர்த்து விடுவாராம். அது மட்டுமன்றி பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிகம் சர்க்கரை உபயோகிக்கப்பட்ட உணவுகளையும் இவர் தவிர்த்து விடுவாராம்.  உலர் பழங்கள், வாழைப்பழம், நட்ஸ் ஆகியவற்றை ஹெல்தி ஸ்நாக்ஸாக தினமும் உட்கொள்கிறார்.


சாட்:


அமிதாப் பச்சனுக்கு சாட் சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். குறிப்பாக புது டெல்லியில் பிரபலமாக இருக்கும் பெங்காலி ஸ்வீட் ஹவுஸ் கடையின் சாட்கள் என்றால் மிகவும் பிரியமாம். இவருக்கு பிடித்த சாட்டில், கொஞ்சம் இனிப்பு, புளிப்பு, காரம் என பல சுவைகள் கலந்து இருக்கும். இவருக்கு இது மிகவும் பிடிக்கும் என்றாலும் அதை அளவாகத்தான் எடுத்துக்கொள்வாராம். தனக்கு பிடித்ததை அளவுடன் சாப்பிடுவது இவரது நீண்ட நாள் ஆயுளுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அமிதாப் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு... ஆனால் மகளுக்கு இவ்வளவு தானா..!!


நீர்ச்சத்து:


அமிதாப் பச்சன் போல அதிக வருடங்கள் வாழ வேண்டும் என்றால், நாம் உடலில் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். உடலில் ஆற்றலை தக்க வைத்துக்கொள்ள, தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். தினசரி 8 டம்ளர் தண்ணீர், அந்த நாளை நன்றாக கடக்க உதவும். அது மட்டுமன்றி, அம்தாப் டீ-காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது. 


மன பலம்:


ஒருவர், வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றாலோ நீண்ட காலம் வாழ வேண்டும் என்றாலோ உடல் பலத்தை விட மனபலம் அதிகமாக இருக்க வேண்டும். இது, வித்தியாசமாக சிந்திக்கும் திறனையும், பல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் நம்மை தயார் படுத்தும். அதிக மனபலம் கொண்டவர், அமிதாப். இவருக்கு முதுமை தெரியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். 


மருத்துவ பரிசோதனைகள்:


வயதாகி விட்டதால், அமிதாப் பச்சன் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வரூகிறார். இது, உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தானாகவே காண்பித்து விடும். இதனால், அப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்னரே தடுத்து விடலாம். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி & அமிதாப் பச்சன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ