காலை உணவிலும், இரவு உணவிலும் சட்னியை நாம் சேர்த்துக்கொள்வது வழக்கம். சில சமயங்களில் மதிய உணவில்கூட சட்னி வகைகள் இடம்பெறும். குறிப்பாக சிற்றுண்டி உணவுகளுக்கு சட்னி அத்தியாவசியமானது என்பதில் பலர் உறுதியாக் ஐருப்பார்கள். சட்னி சுவைக்கு மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. அப்படி உடல்நலத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கும் சட்னி வகைகளை காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்காயம்-பூண்டு சட்னி: 


வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த இரண்டு பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்ட சட்னியை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இரத்தத்தில் கொழுப்பை ஒழுங்குப்படுத்தும். பக்கவாதம் வராமல் தடுக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இது சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவைக்கும்.


கொத்தமல்லி சட்னி: 


எளிதாக தயார் செய்துவிடலாம் என்பதோடு சுவையும் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் சி, கே மற்றும் புரதங்களும் அதிகம் இருக்கின்றன. செரிமானத்தை மேம்படுத்த உதவும். நீரிழிவு நோயாளிகள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை தூண்ட உதவும். வாய்ப்புண் பிரச்னையால் அவதிப்படுபவர்களும் கொத்தமல்லி சட்னி சாப்பிடலாம்.


தக்காளி சட்னி: 


தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்பு குறைவான அளவிலேயே உள்ளது. தக்காளி சட்னி இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. 


புதினா சட்னி: 


கோடை காலத்தில் வயிற்றுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தி கொடுக்கும் . இதில் வைட்டமின்கள் பி, சி, டி ஆகியவை நிறைந்திருக்கின்றன. வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தையும் எளிமையாக்கும். பசி உணர்வை தூண்ட செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். குமட்டலை போக்கி உடல் வீக்கத்தை குறைக்கும்


நெல்லிக்காய் சட்னி: 


நெல்லிக்காய் கசப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் இதனை விரும்புவதில்லை. ஆனால் நெல்லிக்காய் உடலுக்கு அவ்வளவு நல்லது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த ஒன்றாகும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ