காய்ச்சாத பாலை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
பாலில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் இருக்கிறது என தெரிந்தாலும், அவற்றை காய்ச்சாமல் குடிக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கிறது.
பாலை காய்ச்சிக் குடிக்கலாமா? காய்ச்சாமல் குடித்தால்? என்ன பிரச்சனை என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பால் ஒரு ஆரோக்கியமான ஊட்டச்சத்தான உணவு. இதனை காய்ச்சிக் குடித்தாலும், காய்ச்சாமல் குடித்தாலும் அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். காய்ச்சாமல் குடித்தால் கூட என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | Health Tips: சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மூலிகை
காய்ச்சாத ஒரு கப் பாலில் 149 கலோரிகள், 8 கிராம் புரோட்டீன்கள், 8 கிராம் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் 12 கிராம் இருக்கிறது. நார்ச்சத்து இல்லை. சர்க்கரை 12 கிராம் இருக்கிறது. இதுதவிர கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் காணப்படுகிறது. காய்ச்சாத பாலை குடிக்கும் போது, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இதில் இருக்கும் பொட்டாசியம் குறைந்த இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. ரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாகுலர் சிதைவில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.
எல்லா வயதினருக்கும் எலும்பை பராமரிக்க கால்சியம் தேவை. எனவே எலும்பு ஆரோக்கியத்தை பெற காய்ச்சாத பாலை தாரளமாக குடிக்கலாம். குழந்தை பருவ ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களும் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளலாம். பாலில் உள்ள லாக்டோஃபெரின், இம்யூனோகுளோபுலின், லைசோசைம், லாக்டோபெராக்ஸிடேஸ், பாக்டீரியோசின்கள், ஒலிகோசாக்கரைடுகள் மற்றும் சாந்தின் ஆக்சிடேஸ் போன்ற ஆன்டி மைக்ரோபியல் உயிரிகள் காணப்படுகிறது. இவை தீங்கு விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் படிக்க | Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ