Tamilnadu Live Today : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் நடக்கிறது. அவருக்கு நினைவிடம் அமைக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்த நிலையில், மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. எப்ஐஆர் லீக் ஆனது எப்படி? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த செய்திகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.