புனேயில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (SII) வியாழக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் மஞ்சரி வளாகத்தில் பிற்பகல் தீப்பிடித்த உடன், 15 தீ அனைக்கும் வாகனங்கள் அந்த இடத்திற்கு விரைந்தன. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனம், லட்சக்கணக்கான அளவில், COVISHIELD கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சரி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, தடுப்பூசி உற்பத்தி பாதிக்காது என்று நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். "தீ விபத்து தடுப்பூசி உற்பத்தியை பாதிக்காது. SII மஞ்சரி ஆலை வளாகத்தில் தடுப்பூசி தொடர்பான வேலைகள் நடைபெறவில்லை.  அந்த வளாகத்தில் தடுப்பூசி சேமித்து வைக்கப்படவில்லை. தடுப்பூசி உற்பத்தி தீ பிடித்த இடத்திற்கு வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு வளாகத்தில் நடந்து வருகிறது. எனவே கவலைப்பட ஒன்றுமில்லை, " அப்பகுதியின் சட்டம்னற உறுப்பினர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


"இப்போதைக்கு, நெருப்பின் தன்மை, சேதங்களின் அளவு அல்லது காரணங்கள் பற்றிய விவரங்கள் எங்களிடம் இல்லை. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறோம்" என்று நிறுவனத்தின் அதிகாரி கூறினார்.


இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கண்ணாடிகளை உடைத்து கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தீயணைக்கும் பணி மற்றும் மீட்பு பணியில் உதவ தேசிய பேரிடர் நடவடிக்கை (NDRF) குழுவும் ஈடுபட்டுள்ளது.


மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே புனே நகராட்சி ஆணையருடன் தொடர்பு கொண்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.


மாகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் மும்பையில் இருந்து புனேவுக்கு செல்கிறார்.


இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா ட்வீட் செய்துள்ளார் 
"உங்கள் அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. ஒரு சில தளங்கள் தீயில் எரிந்த போதிலும், தீ காரணமாக எந்த உயிர்களும் இழக்கப்படவில்லை அல்லது பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்பது மனதிற்கு நிம்மதி அளிக்கும் செயல்" என்று பூனவல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ | Breaking: கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் SII-ன் ஆலையில் தீ விபத்து


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR