கஞ்சா பக்க விளைவுகள்: இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கஞ்சா பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் இது சட்டபூர்வமானது. ஆனால், சில நாடுகளில் அதனை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையாக தண்டனை விதிக்கப்படுகிறது. கஞ்சா இந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கஞ்சாவை உட்கொண்ட பிறகு, அது ஏற்படுத்தும் உடனடி தாக்கம் சற்று வினோதமாக இருக்கும். கஞ்சாவை எடுத்துக் கொண்ட சிலர் அதிக மகிழ்ச்சி அடைகிறார்கள்; சத்தமாக சிரிக்கிறார்கள் அல்லது சிலர்  பல மணிநேரம் சோகமாக இருப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூளையில் நேரடி பாதிப்பு


கஞ்சாவை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அது நேரடியாக மூளையை பாதிக்கிறது. மற்ற மருந்துகளைப் போல, இது உடனடியாக பலனைக் காட்டாது. சந்தோஷமாக அனுபவித்து சாப்பிடுபவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது. அதனால்தான் அவர்கள் விளைவுகளை பற்றி யோசிக்காமல் போதை பொருளுக்கு அடிமையாகி பொஇன்னர் தவிக்கின்றனர். அதன் பின் அதன் விளைவுகளை கஞ்சா எடுத்துக் கொள்ளும் சந்திக்க வேண்டும். கஞ்சாவின் விளைவு சுமார் 30 நிமிடங்கள் கழித்து தெரிய ஆரம்பிக்கிறது.


கஞ்சா எடுத்துக் கொண்ட பிறகு மக்கள் ஏன் சிரிக்கவும் அழவும் தொடங்குகிறார்கள்


கஞ்சா குடித்துவிட்டு மக்கள் ஏன் அதீத மகிழ்ச்சி அடைகிறார்கள் என்ற கேள்விக்கான பதில் இப்போது நமக்குத் தெரியும். உண்மையில் இதற்கான காரணம் டோபமைன் ஹார்மோன் ஆகும், இது மகிழ்ச்சியான ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் அதிகரிப்பு அல்லது குறைவால் நமது நடத்தை மாறுகிறது. ஒருவர் கஞ்சாவை உட்கொள்ளும்போது, ​​இந்த ஹார்மோனின் காரணமாக அவர் தொடர்ந்து சிரித்து கொண்டே இருக்கிறார் அல்லது தொடர்ந்து கவலையுடன் துக்கத்தில் இருப்பார்.


அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தை மோசமாக்கும்


கஞ்சா ஒரு நபரின் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. அதனால், கஞ்சா எடுத்துக் கொண்ட பிறகு அவர் மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒன்றை கட்டுபாட்டின்றி செய்யத் தொடங்குகிறார். மேலும் அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியாது. இது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்பதால், அதை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். உலகின் பல நாடுகளில், இது மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க இதை செய்யாதீர்கள்... 6 பக்கவிளைவுகளால் பாதிக்கப்படலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ