“காதலிக்காதே மனசே காதலிக்காதே..” என காதலில் விழுந்து தன்னை தொலைத்த இளைஞர்கள் குடித்து விட்டு நடனமாடுவதை சினிமாவில் பார்த்திருப்போம். காதல் பிரேக்-அப்பிற்கு பின்னர் பலர் மனதளவில் பாதிக்கப்படுவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒழுங்காக இயங்க முடியாது, சரியாக தூங்கவோ-சாப்பிடவோ முடியாது. இப்படி, ஒரு மனிதனின் மனதை உருகுலைத்து சீர்குலைக்கும் காதல் முறிவு, ஒருவரின் உடலிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் முறிவு நோயா?


காதல் முறிவு என்பது பலருக்கு சிறிய விஷயமாக தோன்றலாம். சிலருக்கு அது மலை போன்ற பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், உண்மையாகவே காதலித்து மனதளவில் நொறுங்கி போனவர்கள் Broken Heart Syndrome எனும் பாதிப்பில் ஒரு கட்டம் வரை இருப்பார்களாம். இது குறித்து, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒரு மருத்துவ ஆராய்ச்சியை நடத்தியது. அந்த ஆய்வில் காதல் முறிவு ஏற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை அந்த நிறுவனம் ஈடுபடுத்தியது. 


ஆய்வு:


அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களிடம் அவர்களின் முன்னால் காதலர்களின் போட்டோக்கள் காண்பிக்கப்பட்டன. அப்போது, அவர்களின் மூளைம் உண்மையாகவே உடலில் வலி ஏற்படுத்தக்கூடிய நரம்புகளை தூண்டி விட்டதாக கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு போதை தரும் நரம்புகளையும் மூளை தூண்டி விட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் ஒருவர், இது குறித்து பேசுகையில் இது போல உடலில் மாற்றம் ஏற்படுவது நாம் மனதளவில் அதிகமாக அழுத்தத்தை உணருவதால்தான் என கூறுகின்றனர். இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களிடம் அவர்களின் முன்னால் காதலர்களின் போட்டோக்கள் காண்பிக்கப்பட்ட போது, அவர்களின் இதய துடிப்பு அதிகரித்ததாகவும், அட்ரினலின் ரஷ் அதிகரித்ததாகவும், ரத்தம் ஒட்டும் தன்மை அடைந்ததாகவும் கூறியிருக்கின்றனர். 


காதல் முறிவினால் ஏற்படும் மன அழுத்தம், நமது தூக்கத்தை கெடுக்குமாம். நல்ல தூக்கம் என்பது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கியமான ஒன்றாகும். இது கெட்டுவிட்டால், நோயெதிர்ப்பு சக்தியும் குறையும், நோய்க்கிருமிகளில் இருந்து ஆபத்தான நோய்கள் வரை எது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 


குணாதிசய மாற்றம்:


பலருக்கு, காதல் முறிவு ஏற்பட்டவுடன் அவர்களின் குணாதிசயத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கொண்டிருப்பவர்களுக்கு கூட தினசரி நாளை கடந்து போவது கடினமான காரியமாக ஆகிவிடும். ஒரு சிலர், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வர். ஒரு சிலர், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களை பின்பற்றி அதனால் உடல் எடை அதிகரிக்கும் ஆபத்திலும் சிக்கிக்க்கொள்வர். 


காதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?


>”Only Way to get over something, is to get through it first” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உள்ளது. இதற்கு அர்த்தம், “ஒன்றை நீங்கள் கடந்து போக வேண்டும் என்று நினைத்தால் அதன் வழியே கடந்து செல்வது” என்பதுதான். எனவே, உங்கள் உணர்வுகளை புறக்கணிக்காமல், அதை முழு மனதுடன் அங்கீகரியுங்கள். 


>நம் மனதில் ஆயிரம் கேள்விகள், ஆயிரம் உணர்வுகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு கலைத்துப்போடப்பட்டது பாேல இருக்கும். ஆனால், நம் மனதில் எது குழப்பமாக இருக்கிறது, எதை நினைத்து நாம் கவலைக்கொள்கிறோம் என்பதை ஒரு ஜர்னலில் எழுதினால், 1000 பிரச்சனையும் மனக்குழப்பமும் 500ஆக குறையலாம். 


>மனம் விட்டு உங்களுக்கு யாருடன் பேச விருப்பமோ அவர்களிடம் பேசுங்கள். அப்படி யாரும் இல்லை என்றால், நல்ல மனநல ஆலோசகரை அணுகுவதில் எந்த தவறும் இல்லை. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ