இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய 7 பேர் கேரளாவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மக்கள் குறித்து சுகாதாரத் துறை மிகவும் எச்சரிக்கையாக உள்ளது, அவர்கள் பல மட்டங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவிலிருந்து திரும்பிய இந்த பயணிகளில் கொரோனா வைரஸின் அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை, என்றபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்கள் அவர்களை சாதாரண மக்களிடமிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.


சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல்கள் படி, இதுவரை 1287 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 41 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸால் இறந்த செய்தி வந்ததில் இருந்து, இதுவரை 96 விமானங்களில் 20 ஆயிரத்து 844-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இந்த சுகாதார பரிசோதனைகளில் கொரோனா வைரஸின் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


இதுவரை பல்வேறு நாடுகளில் இருந்து வரும் 96 விமானங்களின் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த 96 விமானங்களில் உள்ள 20 ஆயிரம் 844 பயணிகளில் கொரோனா வைரஸின் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலர் இறந்த பின்னர், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஒவ்வொரு வகையான சூழ்நிலைகளையும் கண்காணித்து வருகிறார்.