இந்த அறிகுறிகள் இருக்கிறதா? நரம்பியல் கோளாறாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
Nervous System Disorders: நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை சில அறிகுறிகள் உணர்த்துகிறது, அதனை வைத்து நாம் முன்கூட்டியே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
Nervous System Disorders: நமது உடலின் மிகவும் சக்தி வாய்ந்ததொரு நெட்வொர்க்காக நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. பார்வையில் தொடங்கி, நுகர்தல் முதல் நடப்பது, பேசுவது என நமது உடலின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் நரம்பு மண்டலம் தான் முதன்மையானதாக இருக்கின்றது. அத்தகைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் இயக்கம் சீர்குலைந்துவிடும். நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை சில அறிகுறிகள் உணர்த்துகிறது, அதனை வைத்து நாம் முன்கூட்டியே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
1) நரம்பியல் கோளாறின் மிகவும் பொதுவான அறிகுறியாக தலைவலி உள்ளது, கழுத்துக்கு மேல் உள்ள வலிகள் இதில் அடங்கும். இதில் ஒற்றைத் தலைவலி, டென்ஷன் வகைத் தலைவலி, கொத்துத் தலைவலி அல்லது இரண்டாம் நிலைத் தலைவலி போன்ற வலிகள் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், சைனசிடிஸ், மூளை இரத்தக் கட்டிகள், மூளைத் தொற்று, காயம், மூளைக் கட்டிகள், அனூரிஸம் போன்றவற்றாலும் தலைவலி ஏற்படும். கடுமையான மற்றும் தொடர்ந்து இருக்கும் புதிய தலைவலி, காய்ச்சல், சோம்பல், இரட்டை பார்வை, பார்வைக் குறைவு, வலிப்புத்தாக்கங்கள், தலையில் காயத்திற்குப் பிறகு தலைவலி. திடீரென ஏற்படும் மோசமான தலைவலி போன்றவை இருந்தால் ஆரம்பத்திலேயே நாம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | தூக்கமின்மைக்கு தீர்வுகளை கொடுக்கும் AI..! இனி நிம்மதியாக தூங்கலாம்
2) நரம்புகள் சேதமடைவதால் நியூரோஜெனிக் வலி ஏற்படுகிறது. வட்டு நோய், ஸ்போண்டிலோசிஸ், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற பல்வேறு காரணங்களினால் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றது. சில நேரங்களில் ஃபைப்ரோமியால்ஜியாவால் நாள்பட்ட வலி ஏற்படுகிறது, இதனால் சோர்வு, தூக்கம், நினைவாற்றல் இழப்பு மற்றும் மனநிலை பிரச்சினைகள் போன்றவை ஏற்படும். நாள்பட்ட வலி இருந்தால் நீங்கள் உடனே சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
3) வெர்டிகோ என்பது உடல் சுழலும் உணர்வு ஆகும், இந்த நிலையில் மிகவும் பலவீனமாக உணரக்கூடும். பொதுவாக வெர்டிகோ உடலில் சமநிலை அமைப்பில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுகிறது, இது புற வெர்டிகோ மற்றும் மத்திய வெர்டிகோ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. புற வெர்டிகோ திடீர் தலை சுழற்சியால் தூண்டப்படுகிறது மற்றும் இது குறுகிய காலம் நீடிக்கும். எபிசோடிக், காதுகளில் டின்னிடஸ் அல்லது செவிப்புலன் பிரச்சினைகள், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். மூளையில் உள்ள பிரச்சனைகளால் மத்திய வெர்டிகோ ஏற்படுகிறது, நீண்ட கால வெர்டிகோ இருப்பின் பார்வை இழப்பு, உணர்வின்மை, மண்டை நரம்பு பலவீனம் போன்றவை ஏற்படும். பக்கவாதத்தாலும் சிலருக்கு திடீரென்று வெர்டிகோ ஏற்படும்.
4) மூளை செல்களுக்கு இடையே ஏற்படும் கட்டுப்பாடற்ற மின் செயல்பாடுகளின் வெடிப்புகளால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. மருந்து, காய்ச்சல் போன்ற கடுமையான பிரச்சனையின் காரணமாகவும் சிலருக்கு வலிப்பு ஏற்படலாம். உடலின் ஒரு பகுதியில் அல்லது உடல் முழுவதும் வலிப்பு ஏற்படும். எலக்ட்ரோ என்செபலோகிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் பிற சிகிச்சைகளால் வலிப்பின் தன்மையை கண்டறியலாம்.
5) மனிதர்களுக்கு முழு உடலும் செயல்பட வேண்டியது அவசியம், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் பலவீனம் ஏற்பட்டால்அது பல விளைவுகளை ஏற்படுத்தும். முகத் தசைகளின் பலவீனம் ஃபேஷியல் பால்சி என்றும், மூட்டு பலவீனம் மோனோபரேசிஸ் என்றும், உடலின் ஒரு பாதியின் பலவீனம் ஹெமிபரேசிஸ் என்றும், இரண்டு கால்களின் பலவீனம் பராபரேசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. கட்டிகள், அதிர்ச்சி, ஏஎல்எஸ் போன்ற சிதைவு காரணங்கள் போலியோமைலிடிஸ் போன்ற தொற்றுகள், மயோசிடிஸ் போன்ற அழற்சி கோளாறுகள் ஏற்படும்.
6) நரம்பியல் கோளாறு உள்ள நோயாளிகளின் பொதுவான புகார் நினைவாற்றல் இழப்பு தான். சில சமயம் வயதானவர்களுக்கு முதுமையின் காரணமாக கூட நினைவாற்றல் இழப்பு ஏற்படும். டிமென்ஷியாவினால் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளில் சிரமம், அடுப்பை அணைப்பது, நெருங்கிய குடும்பம் மற்றும் நண்பர்களின் பெயர்களை மறப்பது அல்லது மொழி தொடர்பான பிரச்சனைகள் போன்றவை உள்ளது.
மேலும் படிக்க | தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ