தினமும் உட்கார்ந்தே வேலை செய்தால் ஆயுள் குறைந்துவிடும்... அதிர்ச்சி அளிக்கும் பக்கவிளைவுகள்!

Side Effects of Sitting For Long Hours: நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்வது உங்களுக்கு பல லட்சங்களை ஈட்டி தரலாம், ஆனால் அது உங்களின் ஆயுளை சுருக்கி, உங்களின் வாழ்க்கை இருட்டாகிவிடும் என்பதை உங்களுக்கு தெரியுமா...?

Written by - Sudharsan G | Last Updated : Mar 17, 2023, 11:47 PM IST
  • 1950ஆம் ஆண்டு முதல் உட்கார்ந்த நிலையிலான வேலைகள் 83 சதவீதம் அதிகரித்துள்ளன.
  • இதனால், உடல் மற்றம் மன ஆரோக்கியம் கெடுக்கிறது.
தினமும் உட்கார்ந்தே வேலை செய்தால் ஆயுள் குறைந்துவிடும்... அதிர்ச்சி அளிக்கும் பக்கவிளைவுகள்!

Side Effects of Sitting For Long Hours: இங்குள்ள நம்மில் பலர் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதை வாடிக்கையாக வைத்திருப்போம். அலுவலகங்களில் நம்மில் பெரும்பாலோர் தொடர்ந்து பல மணிநேரம் அமர்ந்திருப்போம். நீங்கள் சில உடல் பயிற்சிகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கலாம். ஆனால் பல மணிநேரம் ஒரே இடத்தில் இருப்பது உடலுடனான உங்கள் உறவுக்கு ஒரு பெரிய ஆபத்து என்றுதான் கூறவேண்டும். 

தொழில்நுட்பத்தின் வசதி நம்மை மேசைகளுக்குப் பின்னால் உள்ள திரைகளில் இறுக்கமாகப் பிடித்து உட்கார வைத்துள்ளது. வேலை முதல் பொழுதுபோக்கு வரை அனைத்தும் திரையில் கிடைக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, 1950ஆம் ஆண்டு முதல் உட்கார்ந்த நிலையிலான வேலைகள் 83 சதவீதம் அதிகரித்துள்ளன என்று தகவல்கள் கூறப்படுகிறது. இப்படி உட்கார்ந்தே இருப்பது, ஆரோக்கியத்தில் பல கடுமையான பாதிப்புகளுக்கு வழி வகுக்கும்.

ஆயுட்காலம் குறையும்

உட்கார்ந்திருப்பது எப்படி ஆயுளைப் பறிக்கிறது என்று யோசிக்கிறீர்களா? அதிக நேரம் உட்காருவதால் உடல் நலம் பாதிக்கப்படும். இது உங்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மக்கள் மனநலம் சார்ந்த பிரச்சனைகள், பதற்றம் அல்லது மனச்சோர்வு போன்றவற்றை உருவாக்கும் அபாயமும் அதிகம். 

மேலும் படிக்க | Coconut Cream Smoothie: இதை குடித்து நாளை துவக்கினால், ஜெட் வேகத்தில் பணியாற்றலாம்!!

எடை அதிகரிப்பு

நாம் நாள் முழுவதும் உட்கார்ந்திருக்கும்போது, லிப்போபுரோட்டீன் லிபேஸ் போன்ற மூலக்கூறுகள் வெளியிடப்படுவதில்லை. அவை எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இது உடல் பருமனுக்கு கூட வழிவகுக்கும். 

நாள் முழுவதும் சோர்வு

நீங்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து இருக்கிறீர்கள், ஆனால் இன்னும் சோர்வாக இருக்கிறீர்கள். அதிக நேரம் உட்கார்ந்தால் பக்கவிளைவுகளில் இதுவும் ஒன்று. ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஒரே நிலையில் இருந்த பிறகு தினசரி வழக்கத்தை சீர்குலைக்கும் சோர்வு உணர்வு ஏற்படும்.டுத்துகிறது. கூடுதலாக, நாள்பட்ட வலியை விளைவிக்கும் முன்கூட்டிய சிதைவுக்கு வழிவகுக்கும்.

முதுகும், கழுத்தும் 

ஆம், அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் முதுகில் வலியை ஏற்படுத்தும். நாம் நீண்ட நேரம் உட்காரும்போது, நமது கீழ் முதுகு, நரம்புகள், தசைநார்கள் போன்றவற்றில் அழுத்தம் கூடுகிறது. தொடர்ந்து திரையில் வேலை செய்வதன் மூலம் ஒருவர் கழுத்தில் விறைப்பைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்! கால்சியம் சூப்பர் ஃபுட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News