கால் விரல்களில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்!
அதிகப்படியான கொலஸ்ட்ரால் நமது கை அல்லது கால் விரல்களில் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது, இதனை நாம் ஆரம்பத்திலேயே கவனித்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் என்றாலே பலருக்குள்ளும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படும், இருப்பினும் கொலஸ்ட்ரால் என்றாலே உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது மட்டும் கிடையாது. பொதுவாக நமது உடலின் சரியான இயக்கத்திற்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது, அதே சமயம் உங்கள் ரத்தத்தில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது உடலுக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தி சில சமயங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அல்லது உடற்பயிற்சியின்மை, புகை, மது, அதிக உடல் எடை போன்றவற்றால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிறது. அதிக கொலஸ்ட்ரால் பெரும்பாலும் "சைலன்ட் கில்லர்" என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது அறிகுறிகளை அரிதாகவே வெளிப்படுத்துகிறது மற்றும் காலப்போக்கில் நமது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் நமது கை அல்லது கால் விரல்களில் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது, இதனை நாம் ஆரம்பத்திலேயே கவனித்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!
அதிக கொலஸ்ட்ராலின் மிகப்பெரிய அறிகுறிகளில் ஒன்று விரல்களில் வலி, கால்விரல்கள். கால்கள் மற்றும் கைகளில் உள்ள இரத்த நாளங்களை கொலஸ்ட்ரால் அடைக்கும்போது இதுபோன்ற வலிகள் ஏற்படும். கால்களில் வலி, நடைப்பயிற்சி செய்யும்போது அதிக வலி, அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் பிளேக்குகளை உருவாக்குவது மற்றும் கால்களில் இரத்த ஓட்டம் தடைபடுவது போன்றவை ஏற்படும். உள்ளங்கைகள், முழங்கைகள் மற்றும் பின்புறத்தில் மஞ்சள் நிற படிவுகள் ஏற்படுவதும் அதிக கொலஸ்டராலின் முக்கியமான அறிகுறியாக காணப்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் பாதிக்கப்பட்ட நபர், முக்கியமாக கண், உள்ளங்கை மற்றும் கீழ் கால்களின் பின்புறம், தோலில் மஞ்சள் நிற படிவுகளை காணலாம்.
கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும் போது மேல் கண்ணிமையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற வளர்ச்சிகள் அல்லது படிவுகள் இருக்கும். சிலர் கால்களில் குளிர்ச்சியை உணரலாம், கால் மற்றும் உடலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். நகங்கள் மற்றும் தோலின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் மாற்றமடையும் என்று கூறப்படுகிறது. பொதுவாக அதிக கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. சில மருந்துகளால் கொழுப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், மருந்துகளை எடுத்துக்கொள்வதை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி கொலஸ்டராலின் அளவை குறைப்பது ஆரோக்கியமான வழியாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், புகைபிடிப்பதை நிறுத்துதல், மது அருந்துவதை நிறுத்துதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ