குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

. நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. ஆனால், இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2023, 12:04 AM IST
  • தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடையும் நிலையில், மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது.
  • அதிகமாக குறட்டை விடுகிறீர்கள் என்றால், நீங்கள் தூங்கும் நிலையை மாற்ற வேண்டும்.
  • அதிக எடை காரணமாக குறட்டை பிரச்சனை ஏற்படலாம்.
குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்! title=

குறட்டை என்பது தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும், இந்த குறட்டை என்பது குறட்டை விடுபவரை தொந்தரவு செய்யாது, ஆனால் இதன் காரணமாக மற்றவர்களின் தூக்கம் பறி போய்விடும். குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டை வந்து விடும்.  இதனால் நம்முடன் படுப்பவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு தவிப்பார்கள். நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. ஆனால், இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. தூங்கும்போது மட்டும் ஏன்  குறட்டை வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.  தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடையும் நிலையில், மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவதைத் தான் குறட்டை என்கிறோம். 

டான்சில் வளர்ச்சி, தைராய்டு பிரச்சினை, மூக்கு இடைச்சுவர் வளைவு,உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது, புகை பிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது, சைனஸ் தொல்லை, என பல விதமான காரணங்களினால் குறட்டை ஏற்படுகிறது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

நீங்கள் அதிகமாக குறட்டை விடுகிறீர்கள் என்றால், நீங்கள் தூங்கும் நிலையை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குறட்டை பிரச்சனையை தவிர்க்கலாம். தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும். ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும். அதிக குறட்டை பிரச்சனை இருந்தால் இரவில் தூங்கும் போது கூடுதலாக ஒரு தலையணையை உபயோகிக்க வேண்டும். இப்படி செய்தால் குறட்டை பிரச்சனை வராது.

அதிக எடை காரணமாக குறட்டை பிரச்சனை ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையைக் குறைப்பது பலனைத் தரும். குறட்டை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், தூங்கும் முன் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

காலையிலும் இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூட்டுடனுள்ள பசு நெய்யை விட்டுக்கொள்ளலாம். நெய்க்குப் பதில் பிராமி எண்ணை கிடைத்தாலும் உபயோகிக்கலாம். புதினாவும் குறட்டை பிரச்சனையை நீக்க உதவும். தூங்கும் முன் உங்கள் மூக்கில் சில துளிகள் புதினா எண்ணெயை விடவும். குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட, இரவு படுக்க செல்லும் முன்  ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி, கலப்படம் இல்லாத ஆர்கானிக் மஞ்சள் தூள் கலந்து கலக்கி தினமும் பருகலாம். 

மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Guava Benefits; பைல்ஸ் பிரச்சனைக்கு கொய்யா எனும் அருமருந்து..! வாயு பிரச்சனைக்கும் நிவாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News