வியர்குருவை அடியோடு விரட்ட... இந்த சூப்பர் கை வைத்தியங்கள் உதவும்!
Prickly Heat Home Remedies: கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதில் கழுத்து மற்றும் முதுகில் வியர்குரு வந்து யாரோ முள்ளால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.
Prickly Heat Home Remedies: கடும் கோடை காலத்தில், பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை வியர்குரு. கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதில் கழுத்து மற்றும் முதுகில் வியர்குரு வந்து யாரோ முள்ளால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.
வியர்குரு அதிகமாக வர முக்கிய காரணம் பித்தம் அதிகம் இருப்பது தான் என்கின்றனர் நிபுணர்கள்.மேலும் உடல் பருமன், கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் வியர்குரு பிரச்சனையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்த சிக்கலைத் தவிர்க்க, பெரும்பாலானோர் சந்தையில் கிடைக்கும் பவுடரைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால், அதனால் பெரிதாக பலன் இருக்காது (Summer Tips). எனவே, வியர்குருவில் இருந்து உடனடியாக விடுபட விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவது பலன் கொடுக்கும்.
வியர்குருவை விரட்டும் வீட்டு வைத்தியங்கள்
முல்தானி மிட்டி: முல்தானி மிட்டி என்பது ஒரு வகை மண். குளிர்ச்சியை கொடுக்கும் இதனை, கடும் உஷ்ணத்தில் தடவினால் அதிக அளவில் நிவாரணம் கிடைக்கும். இது உங்கள் சருமத்தை குளிர்விப்பதால் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படாது. மேலும் பாக்டீரியாவை நீக்கி நிவாரணம் அளிக்கிறது.
அலோ வேரா ஜெல்: கற்றாழை குத்தும் உணர்வை அகற்றி, குளிவிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் இது சருமத்தை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். எனவே, குத்தும் மற்றூம் எரியும் உணர்வைப் போக்க கற்றாழை பயன்படுத்தவும். கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளிக்கலாம். இதன் மூலம், வெப்பத்தால் ஏற்படும் அரிப்பு, சிவத்தல், சொறி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | தர்பூசணி விதையை தெரியாமல் விழுங்கி விட்டால் ஆபத்தா? ஆச்சரியம் தரும் பதில்!
வேப்பிலை: பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வேப்பிலை, வியர்க்குருவை போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பிலை சேர்த்த நீரில் குளிப்பதுடன், அதன் இலைகளை அரைத்து, வியர்குரு மீது தடவினால் அரிப்பு எரிச்சல் நீங்கும். இது தவிர வேப்பம்பூ மற்றும் கற்பூரத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து இந்த நீரில் குளிக்கவும்.
சந்தனம்: பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சி கொடுக்கும் பண்புகள் நிறைந்த சந்தனம், வெப்பத்திற்கும் இதமாஅக, குளிர்ச்சியைத் தந்து, வியகுருவை நீக்கும். பாதிக்கப்பட்ட சருமத்தில் சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் உடல் கலந்து தடவவும். சந்தனத்தின் குளிர்ச்சி சருமத்தை குளிர்விக்க உதவும்.
ஐஸ் கியூப் ஒத்தடம்: கோடை காலத்தில் உங்கள் சருமத்தை முடிந்தவரை குளிர்ச்சியாக வைத்திருங்கள். ஐஸ் கட்டிகளை ஒரு பருத்தி துணியில் கட்டி, பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுவாக தடவினால், இது உங்களுக்கு நிறைய நிவாரணம் தரும்.
வியர்குரு பிரச்சனைக்கு உடல் சூடு முக்கிய காரணமாக இருப்பதால் வெயில் காலங்களில் வறுத்து உணவுகளையும், அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உடல் சூட்டினால் வரும் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதேபோல் வெயில் காலங்களில் உடலை குளிவிக்கும் வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்து, வியர்க்குருவை தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் எடை சர்ரென இறங்க..‘இந்த’ நேரத்தில் உடற்பயிற்சி செய்து பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ