Weight loss TIPS: உடல் எடை குறைய உதவும் கற்றாழை, எப்படி சாப்பிடலாம்
Weight loss TIPS: நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Weight loss TIPS: இன்று நாங்கள் உங்களுக்கு கற்றாழையின் நன்மைகளை பற்றி கொண்டு வந்துள்ளோம். கற்றாழையில் உள்ள நச்சு நீக்கும் தன்மையால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுவது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளை நீக்குவதில் கற்றாழை பயனுள்ளதாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க, கற்றாழையை ஒன்றல்ல பல வழிகளில் உட்கொள்ளலாம். கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகள் போன்றவை இதில் அடங்கும்.
கற்றாழையில் (Aloe Vera) வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3 மற்றும் பி6 உள்ளன. கற்றாழை வைட்டமின் பி 12 மற்றும் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சுமார் 20 வகையான தாதுக்களையும் கொண்டிருக்கும் தாவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே முழு உடலின் (Weight Loss Tips) ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
ALSO READ: பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா? எதில் நன்மைகள் அதிகம்?
உடல் எடையை குறைக்க கற்றாழையை இந்த முறையில் பயன்படுத்துங்கள்
1. வெதுவெதுப்பான நீரில் இதை உட்கொள்ளவும்
உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் கற்றாழையை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். கற்றாழையின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, இப்படி உட்கொள்ளவதே சிறந்த வழியாகும்.
2. தேனுடன் கலந்து உட்கொள்ளவும்
கற்றாழை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும். இதனால் அதன் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
3. எலுமிச்சையுடன் உட்கொள்ளவும்
ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்தக் கரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தொடர்ந்து கிளறிக்கொண்டே சூடுபடுத்தவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிடவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR