பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா? எதில் நன்மைகள் அதிகம்?

 எந்த வகையில் பாதாமை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 06:31 AM IST
  • பாதாம் பருப்பை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • ஊறவைத்த பாதாமில் வைட்டமின் ஈ உடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
  • ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது மூளையை கூர்மையாக்கும்.
பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா? எதில் நன்மைகள் அதிகம்? title=

Benefits of Almonds: பாதாம் பருப்பை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு, அதுவும் குளிர் காலங்களில் மிகவும் நல்லது. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த வகையில் பாதாமை உட்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலர் வறுத்த பாதாம் சாப்பிட விரும்புகிறார்கள், சிலர் உலர் பாதாம் சாப்பிடுவார்கள், சிலர் ஊறவைத்த பாதாமை உட்கொள்வார்கள்.

இந்த அனைத்து வகைகளிலும், பாதாமை (Almond) ஊறவைத்து உண்பது மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

பாதாமில் காணப்படும் சத்துக்கள்

பாதாமில் நார்ச்சத்து (Fiber), புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அவசியமாகவும் கருதப்படுகின்றன.

சுகாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்

உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்கின் கூற்றுப்படி, உலர்ந்த பாதாம் பருப்புகள் அல்லது வறுத்த பாதாம் பருப்புகளை சாப்பிட்டால், அதில் உள்ள துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து உங்கள் உடலுக்கு சரியாக கிடைக்காது. மேலும், அதில் இருக்கும் பைடிக் அமிலம் அவற்றிலிருந்து வெளியேறாது. இது பின்னர் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

ALSO READ:சேப்பங்கிழங்கின் இந்த '7' அற்புத நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்..!! 

பாதாமை எப்பொழுதும் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் 5 மிகப் பெரிய நன்மைகள்:

1. ஊறவைத்த பாதாமில் வைட்டமின் ஈ உடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இது சுருக்கங்கள் மற்றும் மந்தமான தோலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

2. ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதன் மூலம், லிபேஸ் போன்ற சில நொதிகள் உடலில் வெளியிடப்படுகின்றன. அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன, எடை இழப்புக்கு (Weight Loss) உதவுகின்றன.

3. ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது அசுத்தங்களையும் நீக்குகிறது. இந்த அசுத்தங்கள் உடல் சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முதலாவதாக, ஊறவைத்த பிறகு அவை மிகவும் மென்மையாக மாறும். ஆகையால், அவற்றை மெல்வதும் ஜீரணிப்பதும் எளிதாகிறது.

5. ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது மூளையை கூர்மையாக்கும். இதில் உள்ள வைட்டமின் ஈ மூளையின் திறனை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது.

(குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இது உங்களுக்கு கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)

ALSO READ:Lose Weight with Lemon: எலுமிச்சை இருந்தால் உடல் எடை ஒரு பிரச்சனையே அல்ல 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News