பாதாம்: பாதாம் சத்துக்களின் களஞ்சியமாகும். புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து உட்பட பல வகையான ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. பாதாம் சாப்பிடுவதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. இதனை தினமும் உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. இது தவிர, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும், பிபியைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும், கூந்தல் மற்றும் சருமத்தை மேம்படுத்தவும் பாதாம் உதவுகிறது. இருப்பினும், பாதாமில் நன்மைகள் மட்டுமல்ல, தீமைகளும் இருக்கலாம். சில நேரங்களில் அதன் அதிகப்படியான பாதாமை சாப்பிடுவதால் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
சிறுநீரக கற்கள் இருந்தால் பாதாம் சாப்பிட வேண்டாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உண்மையில், பாதாமில் ஆக்சலேட்டின் அளவு மிக அதிகம் உள்ளது. அதை அதிகமாக உட்கொண்டால் அது சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்.
 
வாயுத் தொல்லை ஏற்படலாம்


பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதன் அதிகப்படியான நுகர்வு வயிற்றில் கனத்தை ஏற்படுத்தும், அதாவது வீக்கத்தை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி கூட ஒரு பிரச்சனையாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அதிகப்படியான பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பிரச்சனைக்கு ஆளாகலாம். 
 
வாய் சுகாதார ஆபத்து


பச்சை பாதாமை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடுவதால் வாய் அலர்ஜி, தொண்டை புண் மற்றும் உதடு வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதனால் இன்னும் பல பக்க விளைவுகளும் ஏற்படலாம். 


மேலும் படிக்க |  இரண்டு மறை பல் தேய்த்தும் மஞ்சள் கறை போகவில்லையா... இதை செய்து பாருங்கள்!


ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது மெதுவாக இருக்கலாம்


பாதாம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதை அதிகமாக உட்கொண்டால், இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் உடல் சிரமத்தை சந்திக்க நேரிடும். அதனால்தான் பாதாமை மிகவும் சரியான அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
 
அமில வீச்சு (ஏசிட் ரிஃப்ளெக்ஸ்) ஏற்படலாம்


உங்களுக்கு அடிக்கடி எரிச்சல் உணர்வு அல்லது வயிற்றில் அமிலம் உருவாகும் பிரச்சனை ஏற்பட்டால், பாதாம் உட்கொள்வதை குறைக்க  வேண்டும். ஏனெனில் இது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம். இது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, பாதாம் பருப்பை அதிகம் சாப்பிட வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


பாதாமை ஊறவைப்பது ஆரோக்கியத்திற்கு இந்த நன்மைகளை அளிக்கிறது:


ஜீரணிக்க எளிதானது


ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால், எளிதில் ஜீரணமாகும். மறுபுறம், பாதாமில் ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவற்றின் விளைவு ஊறவைத்த பிறகு அதிகரிக்கின்றது. 


ஊறவைத்து சாப்பிடுவதால் பைடிக் அமிலம் வெளியேறும்


பாதாமை ஊற வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள பைட்டிக் அமிலம் அதிலேயே இருந்து விடுகிறது. ஊறவைக்காத பாதாமில் உள்ள துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தும் உடலால் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் பாதாமை எப்போதும் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.


எடை குறைக்க உதவுகிறது:


ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் லிபேஸ் என்சைம் வெளியாகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க.... உணவுகளும் பழக்கங்களும்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ