சுகர் லெவலை கட்டுப்படுத்தும் பாதாம்: இப்படி சாப்பிட்டு பாருங்க

Benefits of Almonds: உணவு உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் 20 கிராம் பாதாம் சாப்பிடுவது குளுக்கோஸ் அதிகரிப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2023, 06:31 PM IST
  • ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்?
  • சர்க்கரை கட்டுப்பாட்டில் பச்சை பாதாம்.
  • பாதாமில் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
சுகர் லெவலை கட்டுப்படுத்தும் பாதாம்: இப்படி சாப்பிட்டு பாருங்க title=

பாதாமில் உள்ள ஊட்டச்சத்து: பாதாமில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாதாம் சாப்பிடுவதால் மூளை கூர்மையாகிறது. இதை நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஆனால் பாதாம் மூளைக்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கு நிவாரணமாக அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. உணவு உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் 20 கிராம் பாதாம் சாப்பிடுவது குளுக்கோஸ் அதிகரிப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

உணவுக்கு முன் பாதாம்

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 20 கிராம் பாதாமை உட்கொள்வது பிபிஎஹ்ஜி- ஐக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான கொழுப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் புரத நார்ச்சத்து ஆகியவை பாதாமில் ஏராளமாக உள்ளன. இதனுடன், பச்சையான பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எந்தெந்த நோய்களில் பாதாம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்?

நம்மில் பலர் ஒரு நாளைக்கு 5-6 பாதாம் பருப்புகளை உட்கொள்கிறோம். குறிப்பாக காலையில் நாம் பாதாமை உட்கொள்கிறோம். ஆனால் உணவுக்கு முன் 20 கிராம் அல்லது 17-18 பாதாம் சாப்பிடுவது நல்லது. ஆராய்ச்சியாளர்கள் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 60 பேருக்கு குறிப்பிட்ட அளவு பாதாம் அளித்து ஆய்வு செய்தனர். இதில் பாதாம் உட்கொண்ட பின்னர் காணப்பட்ட இரத்த சர்க்கரை அளவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. 

மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்

பச்சை பாதாம் சர்க்கரை கட்டுப்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தது

பாதாமில் மெக்னீசியம் உள்ளது. இது கொழுப்பில் உள்ள டைரோசின் கைனேஸ் ஏற்பியைத் தூண்டும். ஊறவைத்த பாதாமை நாம் பெரும்பாலும் உட்கொள்கிறோம். தோலை நீக்கி பாதாமின் வெள்ளைப் பகுதியை சாப்பிடுகிறோம். இது மெல்லவும், ஜீரணிக்கவும் எளிதானது. ஆனால், இந்த ஆய்வின் முடிவில், பாதாம் பருப்பை பச்சையாக உட்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாதாமை பச்சையாக சாப்பிடும்போது, ​​அவை அதே ஊட்டச்சத்து கலவையை தக்கவைத்துக்கொள்கின்றன. ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவு குறைவதோடு, தோலின் கீழ் இருக்கும் சத்துக்களும் நீக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

பாதாமில் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயில் நிவாரணம் கிடைப்பதோடு மட்டுமின்றி மற்ற நோய்களில் இருந்தும் விடுபடலாம். 20 கிராம் பாதாமில் 2.9 கிராம் நார்ச்சத்து மற்றும் 116 கலோரிகள் உள்ளன. பாதாம் மொத்த மற்றும் எல்டிஎல் கொழுப்பைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News