Beauty Tips: முகப்பொலிவு பெற ஆப்பிள் தோல் அற்புதமாய் உதவும், விவரம் இதோ
பெரும்பாலும் மக்கள் ஆப்பிளின் தோலை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் ஆப்பிளின் தோல் நமது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்க வல்லது. ஆப்பிள் தோல் சருமத்தின் பல சிக்கல்களை தீர்க்க உதவுகிறது.
Beauty Tips: ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும் ஒரு பழமாகும். காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளை உட்கொள்வது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, உடலின் பல வித பல பிரச்சினைகளையும் குணப்படுத்தும். ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக உள்ளதோ அதே அளவு நமது சரும பாதுகாப்பிற்கும் ஆப்பிள் நன்மை பயக்கிறது.
பெரும்பாலும் மக்கள் ஆப்பிளின் (Apple) தோலை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் ஆப்பிளின் தோல் நமது சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்க வல்லது. ஆப்பிள் தோல் சருமத்தின் பல சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. இதன்மூலம் அழகு மேம்படும்.
உங்களுக்கும் பளபளப்பான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டும் என்றால், ஆப்பிள் தோலை பயன்படுத்துவதன் மூலம் அதை எளிதாக பெற முடியும்.
தோலில் உள்ள கறைகளை அகற்ற உதவும்
- முகக் கறைகளால் நீங்கள் கலக்கமடைந்திருந்தால், ஆப்பிள் தோலின் ஃபேஸ் பேக் உங்களுக்கு நல்ல பலன் தரும்.
- ஃபேஸ்பேக் தயாரிக்க, இரண்டு ஸ்பூன் ஆப்பிள் பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள்
- ஒரு டீஸ்பூன் நன்றாக அரைத்த ஓட்மீல் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் (Honey) எடுத்துக் கொள்ளுங்கள்
- மூன்றையும் நன்றாக கலந்து, பின்னர் அதை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வது போல் உங்கள் முகத்தில் தடவவும்.
- 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, கைகளில் சிறிது தண்ணீரை எடுத்துக்கொண்டு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்துகொண்டே அந்த பேஸ்டை முகத்திலிருந்து நீக்குங்கள்.
- இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் பெரிய வித்தியாசத்தை காண்பீர்கள்.
ALSO READ: உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஒளிரும் வகையில் வைத்துக் கொள்ள ஒரு எளிய வழி...
வறண்ட சருமத்திற்கு
சருமம் (Skin) உயிரற்றதாக மாறி, முகம் பொலிவிழந்து காணப்பட்டால், சருமத்துக்கு புத்துணர்சி அளிக்க, ஆப்பிள் தோலின் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், ஆப்பிள் தோலில் ஆப்பிள் தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டியாக்சிடெண்டுகள் ஆகியவை நிறைந்துள்ளன.
- இரண்டு ஸ்பூன் ஆப்பிள் தோல் தூளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- தேவைக்கேற்ப பால் சேர்த்து அதை கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
- இந்த கலவையை உங்கள் கழுத்து மற்றும் முகத்தில் தடவவும்.
- இப்படியே சுமார் அரை மணி நேரம் இருக்க விட்டு, அதன் பிறகு அதை கழுவிவிடவும்.
- இந்த பேக்கை நீங்கள் ஒரு வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.
- முகம் பொலிவையும் பளபளப்பையும் பெற இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
உங்கள் முகத்தில் பொலிவை பெறவும் ஆப்பிள் தோல் உங்களுக்கு உதவும்:
- இரண்டு பெரிய ஸ்பூன் அளவு ஆப்பிள் தோலின் தூளை எடுத்துக்கொள்ளவும்.
- இதில் மூன்று ஸ்பூன் மோர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
- இதை 15-20 நிமிடங்கள் அப்படியே இருக்க விட்டு, பின்னர் உலர்ந்த பிறகு கழுவி விடவும்.
- வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது இந்த பேக்கைப் பயன்படுத்துங்கள்.
- இதற்கிடையில், முகத்தில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டாம், அப்படி செய்தால், அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
ALSO READ: உங்கள் அழகை பாதிக்கும் வாசனை திரவியங்கள்; ஒரு பார்வை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR