குளிர் காலத்தில் காலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு பிரச்சனைகளே வராது..!
Apple | குளிர் காலத்தில் ஏற்படும் வயிறு, செரிமான பிரச்சனைகளை போக்கும் அற்புத பழம் ஆப்பிள். இதனை எப்படி சாப்பிட வேண்டும்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Apple Health Benefits Winter | குளிர்காலம் வந்துவிட்டதால் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவும். இதனால் சளி, காய்ச்சல் உட்பட உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்கள் கூட இந்த சமயத்தில் அதிகம் தொற்றிக் கொள்ளும். அதில் இருந்து தற்காத்துக் கொள்ள உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பெரிய நோய்கள் எல்லாம் வராது. அதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், காய்கறி கீரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில், குளிர்காலத்தில் ஏற்படும் செரிமான மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆப்பிள் பழம் சிறந்த தீர்வை கொடுக்கும். அதனை காலையில் சாப்பிட்டு வந்தால் 5 முக்கியமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஆப்பிள் பழத்தில் இருக்கும் சத்துக்கள் :
ஆப்பிளில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்தும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம். காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?
ஆப்பிளின் ஆரோக்கிய நன்மைகள்
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆப்பிளில் இருக்கும் ப்ரீபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. மேலும் இதில் இருக்கும் குவெர்செடின் மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கண் பார்வையை பராமரிக்க உதவுகிறது. பெக்டின் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை நீக்குகிறது.
செரிமானத்திற்கு நன்மை
ஆப்பிளை உட்கொள்வதால் செரிமான அமைப்பை மேம்படுத்தலாம். ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் காலையில் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
ஆரோக்கியமான இதயம்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ஆப்பிளில் கால்சியம் இருப்பதால், தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது. கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் தேவையான ஒன்று.
உடல் பருமன்
உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆப்பிள் சிறந்த உணவு. ஒரு பழத்தை சாப்பிட்டால் கூட நீங்கள் நீண்ட நேரம் நிறைவாக இருக்கலாம். பசி எடுக்காது. காரணம், ஆப்பிள் பழத்தில் கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதன் காரணமாக உடல் எடையை குறைத்து உடல் பருமனை கட்டுப்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ