வெந்தயம்: பல நோய்களின் ஒரே தீர்வு, இப்படி பயன்படுத்தி பாருங்க
Benefits of Fenugreek: வெந்தய விதைகளை உட்கொள்வது பல கடுமையான நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பை அளிக்கும். எனினும் அதை உட்கொள்வதற்கான சரியான முறையை அறிந்துகொள்வது நல்லது.
வெந்தய விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது: வெந்தய விதைகளை உட்கொள்வது பல கடுமையான நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பை அளிக்கும். எனினும் அதை உட்கொள்வதற்கான சரியான முறையை அறிந்துகொள்வது நல்லது. வெந்தயம் தோல் நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, முடியை வலுப்படுத்த உதவுகிறது. இது மட்டுமல்லாமல், சர்க்கரை மற்றும் இதய நோய் போன்ற கடுமையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த பதிவில், வெந்தய விதைகளின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடுவதற்கான சரியான முறை பற்றி காணலாம்.
வெந்தயம் எந்த நோய்களிலிருந்து பாதுகாக்கிறது?
- நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய்
- வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
- முடி உதிர்வதை தடுக்கும்
- தோல் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- பருக்களை தடுக்கும்
- வயிற்று தொற்றை தடுக்கும்
மேலும் படிக்க | காளானில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்: முழு விவரம் இதோ
வெந்தயத்தின் நன்மைகள் என்ன?
வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. நீங்கள் வெந்தய விதைகளை உட்கொள்ளும்போது, இந்த கரையக்கூடிய நார்ச்சத்து உடலை அடைந்த பிறகு கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை குறைக்கிறது.
ரொட்டி, அரிசி, கஞ்சி, ஓட்ஸ், பருப்பு போன்ற தானியங்களைச் சாப்பிடும்போது, கார்போஹைட்ரேட் உடலுக்குள் சென்றடையும். இந்த கார்போஹைட்ரேட் விரைவான செரிமானத்துடன் இரத்தத்தில் கரைந்தால், உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் சர்க்கரை பிரச்சனை அதிகரிக்கிறது. வெந்தய விதைகள் கார்போஹைட்ரேட்டின் செரிமானத்தை மெதுவாக்கும் போது, அது சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
வெந்தய விதையில் உள்ள அமினோ அமிலங்கள் நமது இரத்தத்தில் இரத்தத்துடன் பாயும் சர்க்கரையை உடைக்க வேலை செய்கின்றன. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து இன்சுலின் அளவு சரியாக இருக்கும்.
வெந்தய விதைகளை எப்படி சாப்பிடுவது?
- ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, மென்று சாப்பிட்டு வரவும். தேவைப்பட்டால், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு சிப் தண்ணீர் குடிக்கலாம். அதன் பிறகு 30 நிமிடங்கள் வரை நீங்கள் எதையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
- உங்களுக்கு டைப்-1 நீரிழிவு அல்லது டைப்-2 நீரிழிவு நோய் இருந்தால், வெந்தய விதைகள் இரண்டு நிலைகளிலும் மிகவும் நன்மை பயக்கும். இது உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குழந்தைகளுக்கு ஜலதோஷ பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ