காளான் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா: வியக்க வைக்கும் ஹெல்த் டிப்ஸ்
Benefits of Mushroom: கலக்கும் காளான்கள்!! வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காளானில் உள்ளன. காளான் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியாக கருதப்படுவதற்கு இதுவே காரணம்.
காளானின் நன்மைகள்: காளான்கள் இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. காளான் இப்போதெல்லாம் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது. பல வகைகளில் தயாரிக்கப்படும் உணவு வகையாகும் இது.
அசைவம் மற்றும் சைவம் என இரு வகையான உணவை உண்பவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும். காளானின் சுவை மிகவும் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காளானில் உள்ளன. காளான் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியாக கருதப்படுவதற்கு இதுவே காரணம். அதன் பலன்களை அறியாதவர்கள், அதன் சுவைக்காக மட்டும் அதை உண்பதுண்டு. காளான் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
நோய்களை விரட்டும்
காளான்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது ஒரு இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பியாக கருதப்படுகிறது. இது நுண்ணுயிர் மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளையும் குணப்படுத்துகிறது. இதில் உள்ள பண்புகளால், உடலின் செல்களை சீர் செய்கிறது.
மேலும் படிக்க | உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா: இந்த 4 பழங்கள் உதவும்
இதயத்தை கவனித்துக்கொள்கிறது
காளான்களால் உங்கள் இதயம் ஆரோக்கியமாகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல வகையான என்சைம்கள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும்.
சர்க்கரை நோய்
நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் மிகவும் நன்மை பயக்கும். காளான்களில் சர்க்கரை இல்லை. உடலுக்கு இன்சுலினை வழங்கவும் இது உதவுகிறது.
வயிற்றுப் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்
காளானை உட்கொள்வதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்கும். ஃபோலிக் அமிலம் காரணமாக, இது உடலில் இரத்தத்தை உருவாக்கவும் உதவுகிறது.
வலுவான எலும்புகளுக்கு
காளான்களை உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும். ஏனெனில் இதில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.
ஆண்டி-ஏஜிங்
காளான் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் ஆண்டி ஏஜிங் குணங்கள் அதிகமாக உள்ளதால், இது உடலில் வயதாகும் பண்புகளை நிறுத்தி, உங்கள் உடலை எப்போதும் திடமாகவும் பலமாகவும் வைத்திருக்கிறது.
மேலும் படிக்க | வெங்காயம், பூண்டு தோலில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்: தூக்கி எறிஞ்சிடாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR