உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா: இந்த 4 பழங்கள் உதவும்

Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரகங்களால் அதை உடலில் இருந்து வடிகட்ட முடியாமல் போகும் போது, ​​இந்த வேதிப்பொருள் மூட்டுகளில் படிக வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 1, 2022, 07:43 PM IST
  • யூரிக் அமிலம் நம் அனைவரது உடலிலும் உருவாகிறது.
  • செர்ரிகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • ஸ்ட்ராபெர்ரிகள், அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரிகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா: இந்த 4 பழங்கள் உதவும் title=

யூரிக் அமிலம் நம் அனைவரது உடலிலும் உருவாகிறது. பியூரின் என்ற வேதிப்பொருள் உடலில் உடைக்கப்படும்போது, ​​அது வேதியியல் வடிவில் யூரிக் அமிலம் எந்று அழைக்கப்படுகிறது. 

பியூரின் நிறைந்த சில உணவுகளான கல்லீரல், பீர், பட்டாணி, பீன்ஸ், நெத்திலி மீன் போன்றவற்றை உட்கொள்வதால் உடலில் பியூரின் அளவு அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் என்பது அனைவரது உடலிலும் உற்பத்தியாகும் ஒரு நச்சுப்பொருளாகும். சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி உடலில் இருந்து எளிதாக அகற்றும்.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரகங்களால் அதை உடலில் இருந்து வடிகட்ட முடியாமல் போகும் போது, ​​இந்த வேதிப்பொருள் மூட்டுகளில் படிக வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது. யூரிக் அமிலம் அதிகரித்தால் மூட்டு வலி ஏற்படுகிறது. இதனால் பாதங்களில் வலி, கால்விரல்கள் மற்றும் கணுக்கால்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. மருந்துகள் மற்றும் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க | Uric Acid அதிகரிப்பதால் பிரச்சனையா: இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும் 

யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் திறம்பட பணிபுரியும் சில பழங்களின் தன்மையால், யூரிக் அமிலம் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டு சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. 

செர்ரி மூலம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தலாம்: 

செர்ரிகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். செர்ரிகளில் உள்ள அந்தோசயினின்கள் எனப்படும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்பு யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் விறைப்பு பிரச்சனை நீங்கும். செர்ரிகளை உட்கொள்வது கீல்வாத தாக்குதலின் அபாயத்தை குறைக்கும். இதனால் இவை படிக வடிவில் மூட்டுகளில் குவிந்துவிடாமல் இருக்கும்.

ஆப்பிள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது: 

தினமும் ஆப்பிளை சாப்பிடுவதால், யூரிக் அமிலத்தின் அளவு கட்டுக்குள் இருக்கும். தினமும் உங்கள் உணவில் குறைந்தது 2 ஆப்பிள்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் அறிகுறிகளையும் அகற்றும்.

ஸ்ட்ராபெர்ரிகள், அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரிகளை உட்கொள்ளலாம்: 

ஸ்ட்ராபெர்ரிகள், அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரிகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த பெர்ரிகள் அனைத்தும் யூரிக் அமிலம் படிக வடிவில் மூட்டுகளில் குவிவதைத் தடுக்கின்றன. பெர்ரிகளில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எலுமிச்சை பயன்படுத்தவும்: 

யூரிக் அமிலம் அதிகரித்தால், ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை எலுமிச்சை சாற்றை பிழிந்து குடிக்கவும். எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | வெங்காயம், பூண்டு தோலில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்: தூக்கி எறிஞ்சிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News