சுகர் லெவல் முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் முள்ளங்கி இலை... சுவையான ரெஸிபி இதோ
பொதுவாக முள்ளங்கியை பயன்படுத்தும் நாம், அதன் இலைகளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், அதில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் குறித்து அறிந்து கொண்டால், அதனை தூக்கி எறிய மாட்டீர்கள்.
இந்தியாவில் முள்ளங்கி மிகவும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று. பொதுவாக முள்ளங்கியை பயன்படுத்தும் நாம், அதன் இலைகளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், அதில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் குறித்து அறிந்து கொண்டால், அதனை தூக்கி எறிய மாட்டீர்கள்.
முள்ளங்கியைப் போலவே, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த இலைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் உணவு உடலுக்குப் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் ஆற்றல் நிறைந்த முள்ளங்கி இலையை சாப்பிடுவதினால் கிடைக்கும் எண்ணற்ற நலன்களை அறிந்து கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது இரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளவர்கள் தினமும் முள்ளங்கி இலை உணவுகளை உட்கொள்ளலாம். இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த (Diabetes Control Tips) உதவும். முள்ளங்கி இலைச் சாற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச உதவுகிறது.
கொலஸ்ட்ரால்
உணவில் முள்ளங்கி இலைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் இதய நோய் அபாயத்திலிருந்து விடுபடலாம். இந்த இலைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. மேலும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவும் கலவைகள் நிறைந்து காணப்படுகிறது. முள்ளங்கி இலைகளில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உதவுகிறது. எனவே உணவில் முள்ளங்கி இலைகளை சேர்ப்பதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் வாய்ப்புகளைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
யூரிக் அமில பிரச்சனை
முள்ளங்கி இலைகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ள எலும்புகளை வலுப்படுத்துவதுடன், பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சிறுநீரகங்கள் மூலம் யூரிக் அமில கழிவுகளை அதிக அளவில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் மூட்டுகளில் யூரிக் அமிலம் சேர்த்து பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்கும்.
இயற்கையான மல்டிவைட்டமினாக செயல்படும், முள்ளங்கி இலையில் பொதிந்திருக்கும் பிற நன்மைகள்
1. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
2. உடல் எடை குறைப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்
3. இயற்கையான மல்டிவைட்டமினாக செயல்படுகிறது
4. இரத்த சோகைக்கு இது நன்மை பயக்கும்
5. செரிமானம் மேம்படும்
6. கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது
முள்ளங்கி இலை மசியல்
500 கிராம் பொடியாக நறுக்கிய முள்ளங்கி இலைகள், அரை டீஸ்பூன் பெருங்காயம், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ருசிக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். சூடான, கடாய் ஒன்றில் முள்ளங்கி இலைகள் சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்தால், முள்ளங்கி சுருங்கி விஃபும் என்பதால், கவனமாக உப்பு சேர்த்து, கீரையை 5 முதல் 6 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைத்து, அதில் வதக்கிய தக்காளி வெங்காயம் சேர்க்கலாம். சீரகம் தாளித்து ரொட்டியுடன் பரிமாறவும்.
முள்ளங்கி இலை சாறு
இது தவிர முள்ளங்கி இலையுடன் பாலக் கீரையை கலந்து சாறு தயாரிக்கலாம். இதற்கு பாலக் கீரை முள்ளங்கி இலைகளை சம அளவு எடுத்துக் கொண்டு, சாறு எடுக்கவும். இந்த சாற்றில் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது பலன் தரும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ