புதுடெல்லி: நமது சமையலறையில் இருக்கும் முக்கிய சமையல் பொருட்களில் கருப்பு மிளகு மிக முக்கியமனதாகும். மிளகை சில உணவு வகைகளில் அப்படியே சேர்த்தும், சிலவற்றில் பொடி செய்து சேர்த்தும் நாம் உணவின் சுவையை அதிகரிக்கிறோம். உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் மிளகில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயுர்வேதத்தில் மிளகு ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


இருமல் மற்றும் சளி பிரச்சனையில் தீர்வு 
இரவு உறங்கும் முன்னர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இஞ்சிச்சாறுடன் (Ginger) ஒரு சிட்டிகை கருப்பு மிளகை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதை தேநீரிலும் கலந்தும் சாப்பிடலாம். 


புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது
ஒரு ஆய்வின்படி, கருப்பு மிளகு புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனெனில் இதில் பைபரின் என்ற ரசாயனம் உள்ளது. மஞ்சளுடன் இதை உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்கும். இது பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.


வலி நிவாரணம்
கருப்பு மிளகில் உள்ள பைபரின் அளவு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தசைகளில் ஏற்படும் வலியை தடுக்கிறது. இது மசாஜ் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகை (Pepper) எண்ணெயுடன் கலந்து சூடு படுத்தி, வலி இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் பெறலாம். 


ALSO READ: தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம்?


வயிற்றுக்கு நல்லது
கருப்பு மிளகு உட்கொள்வது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இது வயிற்று வலி (Stomach Pain), வாயு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளையும் நீக்குகிறது.


முகமும் பிரகாசிக்கிறது
இதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால், இது உண்மை! கருப்பு மிளகை வைத்து ஸ்க்ரப்ப்பிங் செய்வது முகத்தில் பொலிவை அதிகரிக்கும். கருப்பு மிளகை பெரிய துண்டுகளாக நசுக்கி தேனுடன் கலந்து தேய்த்தால் முகம் பளபளக்கும். மேலும், இதனால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தோலில் பொலிவு ஏற்படும். மிளகின் அளவு குறைவாக இருக்க வேண்டும். 


எடை குறைக்க உதவும்
கருப்பு மிளகு நம் உடலில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கிறது. இது செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. மேலும் குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை எரிக்கிறது. மிளகு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


ALSO READ: தினமும் கொத்தமல்லி இலையை ஜூஸ் செஞ்சு குடிச்சா இந்த பிரச்னையே வராது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR