வெயில் காலத்தில் இஞ்சி சாப்பிடலாமா? இஞ்சி நஞ்சா? நண்பனா? இங்கே காணலாம்

கொரோனா வைரஸுக்கு முன்பு குளிர்காலத்தில் இஞ்சியை நாம் இஞ்சி தேநீர், இஞ்சி சூப், தேனுடன் இஞ்சி போன்று பல வகைகளில் பயன்படுத்தினோம். ஆனால் கோடையில், இஞ்சி குறைவாகவே பயன்படுத்தப்பட்டது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2021, 02:16 PM IST
  • குளிர்காலத்தில் பொதுவாகவே நாம் இஞ்சியை அதிகம் பயன்படுத்துவோம்.
  • கோடைகாலத்தில் அதிக இஞ்சி சாப்பிடுவது வயிற்று வலியைத் தூண்டும்.
  • இஞ்சி பசியைத் தூண்ட உதவுகிறது.
வெயில் காலத்தில் இஞ்சி சாப்பிடலாமா? இஞ்சி நஞ்சா? நண்பனா? இங்கே காணலாம் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காலத்தில் சில உணவுப் பொருட்களை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள அனைவரும் பரிந்துரைக்கிறார்கள். அதில் இஞ்சி ஒரு முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. குளிர்காலத்தில் பொதுவாகவே நாம் இஞ்சியை அதிகம் பயன்படுத்துவோம். ஆனால், வெயில் காலத்தில் இஞ்சியை பயன்படுத்துவது குறித்து நம்மில் பலருக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன. 

கொரோனா வைரஸுக்கு (Coronavirus)  முன்பு குளிர்காலத்தில் இஞ்சியை நாம் இஞ்சி தேநீர், இஞ்சி சூப், தேனுடன் இஞ்சி போன்று பல வகைகளில் பயன்படுத்தினோம். ஆனால் கோடையில், இஞ்சி குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுநோய் அதிகமாக பரவி வருவதால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் முயற்சியில், கோடையிலும் அதிக அளவு இஞ்சியை பலரும் பயன்படுத்துகிறோம். கஷாயம், துளசி தண்ணீர், மஞ்சள் பால், வீட்டு வைத்தியங்கள் என அனைத்திலும் நாம் இஞ்சியை சேர்க்கிறோம். 

கோடையில் இஞ்சி சாப்பிடலாமா?

இஞ்சியில் (Ginger) மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், அது ஒரு சூடான உணவுபொருளாகும். கோடைகாலத்தில் இஞ்சியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? உங்கள் மனதில் இந்த கேள்வி இருந்தால், கோடையில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் பற்றி இங்கே காணலாம். 

ALSO READ: வயிற்று வலியா? மாத்திரை வேண்டம், பாட்டி சொன்ன வீட்டு வைத்தியங்கள் இதோ

கோடையில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

- வெயில் காலத்தில் நீங்கள் அதிகமாக உணவில் இஞ்சியை பயன்படுத்தினால், அது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். கோடைகாலத்தில் அதிக இஞ்சி சாப்பிடுவது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்குக்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.

- வெயில் காலத்தில் அதிக இஞ்சியை உட்கொண்டால், நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவை மார்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

- நீரிழிவு (Diabetes) நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள் கோடைகாலத்தில் இஞ்சி சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் மருத்துவரிடம் கலந்துரையாட வேண்டும். இல்லையெனில் அவர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும்.

- மாதவிடாய் இருக்கும் நேரத்தில் அதிக அளவில் இஞ்சியை சப்பிடுவதால், அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

கோடையில் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, கோடைகாலத்தில் தினமும் 2-4 கிராம் இஞ்சியை உட்கொள்ளலாம். ஆனால் அதன் அளவு அதைவிட அதிகரிக்கக்கூடாது. இஞ்சியின் சுவை மிகவும் வலுவானது, இது, நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. நீங்கள் விரும்பினால், நாளின் துவக்கத்திலும் இரவு படுக்கும் முன்னரும் இஞ்சியை உட்கொள்ளலாம். உணவுக்கு 15 நிமிடங்களுக்கு முன் இஞ்சி தேநீர் குடிப்பது எடை குறைக்க உதவும். கோடையில், பெரும்பாலும் பசி எடுப்பதில்லை, தண்ணீரால் வயிறு நிரம்பி விடுகிறது. இஞ்சி பசியைத் தூண்ட உதவுகிறது. மேலும், இஞ்சி பல வகையான தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

ஆகையால், வெயில் காலத்தில் அளவுடன் இஞ்சியை உட்கொண்டால் பயன் பெறலாம், அளவை மிஞ்சினால், இஞ்சியும் நஞ்சாகலாம்!!

(குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)

ALSO READ: Brown Rice vs White Rice: உங்கள் உடல்நலனுக்கு எந்த அரிசி சிறந்தது? இங்கே காணலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News