வெல்லம் ஆரோக்கிய நன்மைகள்: வெல்லம் பொதுவாக  அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்புப் பொருட்களை தயாரிப்பதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை பயன்பாடே அதிக அளவில் உள்ளது. அதிரசம், போன்ற சில இனிப்பு வகைகளைத் தவிர பெரும்பாலும் சர்க்கரையே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் யாரும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும். வெல்லம் சாப்பிடுவதால்  பல விதமான நோய்களை தவிர்க்கலாம். கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது. இந்நிலையில், வெல்ல சாப்பிடுவதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து அருந்துவது, அதிகாலையில், உடனடி ஆற்றலை அதிகரிக்கும்.  இது சிறந்த மருத்துவ நன்மைகளை வழங்குகிறது மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும்.


வெல்லம் தண்ணீர் செய்வது எப்படி


ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை சூடாக்கி, அதில் 1 அங்குல வெல்லம் சேர்க்கவும். கிளறவும், அதனால் அது உருகும். சிறிது ஆறியதும் வடிகட்டி குடிக்கவும். மாற்றாக, நீங்கள் வெல்லத்தை அரைத்து, வெதுவெதுப்பான நீரில் நேரடியாக கலக்கலாம்.


வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்


வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் எடை கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை எடையை அதிகரிக்கச் செய்யும் அதே வேளையில், வெல்லத்தை உட்கொள்வதன் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.


எலும்புகளை வலுவாக்கும் வெல்லம்


வெல்லத்தில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். வெல்லம் தசைகளின் வலிமைக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.


இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்


இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது பெரிதும் நன்மை பயக்கும். வெல்லத்தில் உள்ள சத்துக்கள் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்க வேலை செய்கிறது. இதன் காரணமாக இரத்தம் ஓட்டம் சீராகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.


மேலும் படிக்க | உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?.


இரத்த சோகையை போக்கும்


வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் உடலில் ரத்தம் சோகை ஏற்படாது. இரத்த சோகை போன்ற நோய் உள்ளவர்கள் வெல்லம் சாப்பிடுவது நன்மை பயக்கும். பலவீனமான உடலை வலிமையாக்கும்.


குளிர்காலத்தில் நன்மை பயக்கும் வெல்லம்


வெல்ல உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதால் உடல் சூடாக இருக்கும். குளிர் உங்களை தாக்காது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, காய்ச்சல் போன்ற நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது. கருப்பட்டியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.


செரிமானத்திற்கு நன்மை பயக்கும் வெல்லம்


குளிர்காலத்தில் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நாட்களில், உணவு மற்றும் பானங்களில் மாற்றத்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் உள்ளன. வெல்லம் சாப்பிடுவதால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெல்லத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ