Health Benefits of Raw Banana: நாம் பல வித காய்களை உட்கொள்கிறோம். அனைத்து விதமான காய்களும் உடலுக்கு தேவையான பல வித ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. இவை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. பல வித ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கும் காய்களில் வாழைக்காயும் ஒன்றும். வாழைக்காயால் நம் உடலுக்கு கிடைக்கும் அதிசய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழை மரம் ஒரு அற்புதமான மரமாக கருதப்படுகின்றது. 'வாழையடி வாழையாக' என்ற கூற்றுக்கேற்ப, ஒரு வாழை மரம் தன் அடியில் அடுத்தடுத்து பல வாழைக்கன்றுகளை கொண்டு வருகின்றது. வாழைத்தண்டு, வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என இவை அனைத்துமே மனிதர்களுக்கு பல வகையில் உதவுகின்றன. 


வாழைக்காய்


வாழைக்காயை (Raw Banana) நாம் பல வகைகளில் சமைக்கிறோம். வாழைக்காய் கறி, மசியல், கூட்டு, பொடிமாஸ், சிப்ஸ் என பல விதங்களில் இது நம் நாவிற்கு விருந்து படைக்கிறது. வாழைக்காய் தன்னுள்ளே பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறியுள்ளார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


வாழைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


- வாழைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. 
- இது கெட்ட கொழுப்பு செல்கள் மற்றும் பல அசுத்தங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. 
- வாழைக்காய் செரிமானத்தை சீராக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 
- தினமும் ஒரு வாழைக்காய் சாப்பிடுவது உடல் ஆரொக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
- வாழைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, புரோவிடமின் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பினாலிக் கலவைகள் போன்ற பல பண்புகள் உள்ளன.
- வாழைக்காயில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.


வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 பெரிய நன்மைகள்


1. செரிமானம்


வாழைக்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான (Digestion) அமைப்பை சீராக்கி உணவை விரைவாகச் செரிக்க உதவுவதோடு, உடலின் செயல்திறனையும் அதிகரிக்கின்றது. 


2. நீரிழிவு நோய்


நீரிழிவு நோயாளிகள் வாழைக்காயை சாப்பிடலாம். இது அவர்களுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள நீரிழிவு (Diabetes) எதிர்ப்பு பண்புகள், இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், ஊட்டச்சத்துகளை அளிக்கவும் உதவியாக இருக்கும்.


மேலும் படிக்க | உடல் பருமனை உடனே குறைக்க உதவும் காலை பழக்கங்கள்: 10 நாட்களில் ஒல்லியாகலாம்


3. இதய ஆரோக்கியம்


வாழைக்காய் இதயத்தையும் ஆரோக்கியமாக (Heart Health) வைக்க உதவுகிறது. வாழைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.


4. எடை இழப்பு


உடல் எடையை குறைக்க (Weight Loss) நினைப்பவர்கள் வாழைக்காயை உட்கொள்ளலாம். இது தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் பருமனை விரைவாக கட்டுப்படுத்தும். வாழைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக இது விரைவாக ஜீரணமாகாது. இதனால் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கின்றது. இதன் காரணமாக நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கள்வது தவிர்க்கப்படுகின்றது.


5. சரும ஆரோக்கியம்


வாழ்ழைக்காயில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இவை முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவுகிறது. இந்த வகையில் வாழைக்காய் சரும ஆரொக்கியத்திற்கு (Skin Care) உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மாரடைப்பு ஏற்படும் முன் பெண்களுக்கு தென்படும் அறிகுறிகள்: உஷார் லேடீஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ