வேர்க்கடலையை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என அழைக்கலாம். அந்த அளவிற்கு பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளதால் தான், அதனை ஏழைகளின் பாதம் என்று அழைப்பார்கள். வேர்க்கடலையில், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேர்க்கடலையை, பல்வேறு வகையான வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வறுத்த வேர்க்கடலை பிடிக்காதவர் யாராவது இருக்க முடியுமா என்ன... அதே போன்று வேக வைத்த வேர்க்கடலையும் பலருக்கு பிடிக்கும். வேர்க்கடலை சுண்டல் என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிற்றுண்டி. இந்நிலையில் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் எண்ணற்ற நலன்கள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர். ஊறவைத்த வேர்க்கடலையை முளைகட்டிய தானியங்கள் உடன் சாப்பிடுவது நோயற்ற வாழ்வை கொடுக்கும் என்பதோடு உடல் எடையை குறைக்கவும் (Weight Loss Tips), இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.


ஊறவைத்த வேர்க்கடலையினால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்


வேர்க்கடலையின் தோலில் பைடேட் மற்றும் ஆக்ஸிலட் போன்ற கூறுகள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. எனவே வேர்க்கடலையை ஊற வைத்து உண்ணும்போது, பைடேட்டிங் தாக்கம் குறைந்து, ஊட்டச்சத்தை முழுமையாக உடல் உறிஞ்சி கொள்கிறது. பொதுவாகவே நட்ஸ் வகைகளை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்தை முழுமையாக கிரகித்துக் கொள்ள உதவும் என்று தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


நாள் முழுவதும் புத்துணர்ச்சியை தரும் வேர்க்கடலை


ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விரும்பும் வேர்க்கடலையை, ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால், நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்திருக்கும். மேலும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படும் என்பதால், சுறுசுறுப்புக்கும் புத்துணர்ச்சிக்கும் குறைவே இருக்காது.


மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?


செரிமானத்தை மேம்படுத்தும் வேர்க்கடலை


வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், காலையில் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவது, வயிற்றை சுத்தப்படுத்த உதவும். செரிமானத்தை மேம்படுத்தி, மற்றும் வாயுவில் இருந்து விடுதலை அளிக்கிறது. செரிமானம் சிறப்பாக இருந்தாலே, பலவிதமான நோய்களுக்கு டாட்டா பை பை சொல்லிவிடலாம்.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேர்க்கடலை


ஊறவைத்த வேர்க்கடலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்பதால், வேர்க்கடலை ரத்தத்தை சுத்திகரிப்பதோடு, கொழுப்பை எரித்து இதை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் உடலுக்கு மேலும் உடலுக்கு சூட்டை கொடுக்கும் வேர்க்கடலை, கொழுப்பை எரித்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. மேலும், வேர்க்கடலையில் காணப்படும், பாலி அன்சாசுரேட்டட் கொழுப்புகள், மோனோசர் கொழுப்புகள், கெட்ட கொழுப்பை எரிக்கிறது.


உடல் பருமனை குறைக்க உதவும் வேர்க்கடலை


வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் இருந்தாலும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உடல் பருமனை குறைக்க வேர்க்கடலை உதவும். கொழுப்பை கரைக்க மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றம் சிறப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியம். எனவே தினமும் ஒரு கைப்பிடி ஊறவைத்த வேர்க்கடலை உங்கள் டயட்டில் இருக்கட்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க - அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ