முடி உதிர்வதை தடுக்க வேண்டுமா? இந்த ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்துங்கள்
Hair Care Tips: பயங்கரமான உஷ்ணத்தால் முடியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மூலிகை எண்ணெயை கூந்தலில் பயன்படுத்தலாம்.
Ayurvedic Herbs For Long Hair: கொளுத்தும் வெயிலில் உடலைக் கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, நமது கூந்தலையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த கொடூரமான வெயில் சீசனில், ஆரோக்கியத்தில் கொஞ்சம் அலட்சியம் காட்டினால் கூட நம் முழு ஆரோக்கியமும் கெட்டுவிடலாம். கோடை காலத்தில், ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும மற்றும் முடி பராமரிப்பும் முக்கியம் ஆகும். வெயில் காலங்களில் அதிக வியர்வை மற்றும் எண்ணெய் பசை தலையில் பொடுகு, அரிப்பு மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே இந்த கோடையில் கூந்தல் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. நீங்களும் கோடை வெயிலின் காரணத்தால் முடி தொடர்பான பிரச்சனைகளால் போராடி வருகிறீர்கள் என்றால், சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும். எனவே கோடையில் கூந்தல் பராமரிப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
இந்த ஆயுர்வேத மூலிகைகளின் பயன்பாடு கூந்தலுக்கு பல வித நன்மைகளை பயக்கும் - Ayurvedic Herbs Is Beneficial For Hair:
தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணெய் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எண்ணெய் தடவுவதன் மூலம் கூந்தலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க முடியும். உங்கள் தலைமுடி உதிர்வதையும், உடைதலையும் நிறுத்தி தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற விரும்பினால், இந்த ஆயுர்வேத பொருட்களைப் பயன்படுத்தலாம். அவை செம்பருத்தி, நெல்லிக்காய், கறிவேப்பிலை, தேங்காய், பிராமி போன்ற குளிர்ந்த மூலிகைகள் ஆகும். இந்த பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரித்தால் கூந்தல் வலுவாகும்.
மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி : (How To Make Herbal Oil At Home)
இந்த மூலிகை எண்ணெய் தயார் செய்ய, செம்பருத்தி, நெல்லிக்காய், கறிவேப்பிலை, தேங்காய், பிரமி போன்ற குளிர்ந்த மூலிகைகளை ஒன்றாக கலந்து கலவையை கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் கேஸை அணைக்கவும். சிறிது ஆறவைத்து வடிகட்டி கண்ணாடி பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தடவினால் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும். அதேபோல் இந்த எண்ணெயை இரவில் மசாஜ் செய்து மறுநாள் காலையில் தலைமுடியைக் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ