Weight Loss With Lemon Honey : எலுமிச்சை நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இந்த புத்துணர்ச்சியூட்டும் பானம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், இவற்றில் வைட்டமின் சி இன் நல்ல மூலமாகும், ஆனால் நீங்கள் அதில் சில கூடுதல் பொருட்களைச் சேர்த்து வந்தால், அது உங்கள் எடையைக் குறைக்க பெரிய அளவில் உதவும். இந்த பொருளை எலுமிச்சம்பழ நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால், தொப்பை மற்றும் தொடையில் சேர்ந்திருக்கும் ஒட்டுமொத்த உடல் கொழுப்பையும் குறைக்க உதவும். கொழுப்பையும் எடையையும் அதிகரிப்பது இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தொப்பை மற்றும் உடல் கொழுப்பை குறைக்க மக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். நீங்களும் இதே பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருந்தால், எலுமிச்சை நீரில் ஒரு சிறப்புப் பொருளைக் கலந்து குடிப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த பொருள் என்ன என்பதை பார்ப்போம்.
எலுமிச்சை நீரில் கலந்து குடித்தால் என்ன நன்மை? | What is beneficial to drink mixed with lemon water?
எலுமிச்சை - 1
வெதுவெதுப்பான நீர் - 1 கிலாஸ்
தேன் - 1 தேக்கரண்டி
செய்யும் முறை:
முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.
இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை நன்றாகக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
மேலும் படிக்க | சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
தேன் மற்றும் எலுமிச்சை நீரின் நன்மைகள் | Benefits of honey and lemon water
எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்: தேன் மற்றும் எலுமிச்சை நீரை ஒன்றாக கலந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன்படி இந்த கலவை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை சுலபமாக கரைக்க உதவும்.
செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது: இந்த பானம் உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, உணவு செரிமானத்தை துரிதப்படுத்தும்.
நச்சு நீக்கம்: எலுமிச்சை நீர் மற்றும் தேன் ஒன்றாக கலந்து குடித்தால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்: இந்த பானம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், கலோரிகளை எரிக்கும் திறனை அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்: எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
தேனை குறைந்த அளவில் பயன்படுத்துங்கள், ஏனெனில் அதிக அளவு தேனை உட்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம். அதேபோல் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் அல்லது ஏதேனும் நோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், இந்த பானத்தை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை கட்டாயம் அணுகவும்.
முக்கிய குறிப்பு: எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் கொழுப்பை குறைக்கலாம். இந்த கலவை உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் வழங்குகிறது. இதனுடன், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையையும் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ