முடி உதிர்வதை தடுக்க கற்றாழை மற்றும் கடுகு எண்ணெய்
Applying Aloe Vera And Mustard Oil On Hair: கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை முடிக்கு தடவினால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை தலைமுடியில் தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை தலைமுடியில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்: கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை முடிக்கு தடவினால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வட மாநிலங்களில் சிறுவயதில் இருந்தே அனைவரும் கடுகு எண்ணெயை தலைமுடியில் தடவி வருகின்றனர். இது முடிக்கு டானிக்காக செயல்படுகிறது. கடுகு எண்ணெயைத் தடவினால் முடி வலுப்பெறும். அதேபோல் கடுகு எண்ணெயில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. அதன்படி கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை தலைமுடிக்கு தடவி வந்தால், கூந்தலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனவே கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை கூந்தலில் தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை கூந்தலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பொடுகு தொல்லை நீங்கும்
கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை தலை முடிக்கு தடவினால் பொடுகு பிரச்சனை நீங்கும். கற்றாழை மற்றும் கடுகு எண்ணெய் இரண்டும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை பூட்டி பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட இது உதவுகிறது.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
சேதமடைந்த முடியை குணப்படுத்த உதவும்
சேதமடைந்த முடியை குணப்படுத்த கற்றாழையை கடுகு எண்ணெயுடன் நன்கு கலந்து வாரத்தில் 3 நாட்கள் தடவி வந்தால், சிறப்பு பலன் கிடைக்கும். ஏனெனில் கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது சேதத்தை சரிசெய்து, முடியில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்.
முடி உதிர்வதை நிறுத்த உதவும்
தலை முடியில் கற்றாழை மற்றும் கடுகு எண்ணெய் தடவுவது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த கலவையானது உங்கள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவுகிறது.
தலை முடியில் கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை எப்படி தடவுவது?
இதைப் பயன்படுத்த, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளவும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவி அதை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்னர் முடியை நான்கு கழுவவும். இதை உங்களின் தலைமுடியில் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ