ICMR: டெல்டா வைரஸில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு உண்டு?
ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு COVID-19 ஏற்பட்டு மீண்டவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்ட பிறகும் COVID-19 பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் என பலரை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்துள்ளது
புதுடெல்லி: கோவிட் -19 தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு விதமான கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக கொரோனா வைரஸின் புதிய திரிபான டெல்டா வைரஸ் தொடர்பாகவும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆய்வின்படி, COVID-19 இன் டெல்டா மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பதில் humoral மற்றும் செல்லுலார் நோயெதிர்ப்பு தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.
கொரோனாவின் டெல்டா வகை வைரஸ் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், கோவிட் -19 இலிருந்து மீண்டவர்கள், ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள், பிறரைவிட அதிக அளவு பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வின்படி, COVID-19 நோயை ஏற்படுத்தும் கொரோனாவின் டெல்டா வைரஸ் பாதுகாப்பதில் ’உடலில் உருவாகும் திரவங்கள்’ (humoral) மற்றும் செல்லுலார் நோயெதிர்ப்பு (cellular immune) அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 2, 2021) பயோராக்ஸிவ் ப்ரீபிரிண்ட் சேவையகத்தில் (bioRxiv preprint server) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, 'Neutralisation of Delta Variant with Sera of Covishield vaccines and COVID-19 Recovered Vaccinated Individuals' என்ற பெயரில் இந்த ஆய்வை விஞ்ஞானிகள் நடத்தினர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research), புனே, தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, கட்டளை மருத்துவமனை (Southern Command), ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, புனே ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதன் முடிவின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டால், அது டெல்டா வகை வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் என்று தெரியவந்துள்ளது.
அண்மையில் தோன்றிய பி .1.617 திரிபு (B.1.617 lineage) தோன்றியது. கொரோனா வைரஸின் புதிய திரிபான டெல்டா வைரஸ், இந்தியாவில் கடுமையான பொது சுகாதார பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
B.1.617.1 (Kappa), B.1.617.2 (Delta), B.1.617.3 ஆகிய துணை திரிபுகளையும் இந்த டெல்டா திரிபு உருவாக்கியுள்ளது. டெல்டா மாறுபாடு மெதுவாக மற்ற வகைகளில் ஆதிக்கம் செலுத்துவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. எனவே, உலக சுகாதார நிறுவனம் டெல்டா திரிபு கவலைக்குரிய ஒரு மாறுபாடு” என்று ஆய்வு கூறுகிறது.
Also Read | Fake Vaccination: மும்பை போலி தடுப்பூசி முகாம்; வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
"டெல்டா மாறுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் இந்தியாவில் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு வழிவகுத்தது, இது கோடிக்கணக்கான மக்களை பாதித்தது. இது தவிர, பல அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு குறைந்த அளவே அடங்கியது. அதனால் தான் தொற்றுநோய் பரவல் அதிகரிக்க SARS-CoV-2 வழிவகுத்தது" என்று இந்த் ஆய்வு கூறுகிறது.
SARS-CoV-2 உடன் பாதுகாப்பு நோயெதிர்ப்புத் தன்மை, தொற்றுநோய்க்கு பிந்தைய தடுப்பூசியின் தாக்கம் அல்லது நோய்த்தொற்றின் காலம் குறித்து ஓரளவு மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன என்றும் ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில், கோவிஷீல்ட் (முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ்) தடுப்பூசி போட்டுக் கொண்டு நோய்த்தடுப்பு செய்யப்பட்ட நபர்களின் நோயெதிர்ப்புத் தன்மையை மதிப்பீடு செய்தது, ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு COVID-19 ஏற்பட்டு மீண்டவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்ட பிறகும் COVID-19 பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் எனபலரும் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டனர்.
"ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு, கோவிட் நோய் ஏற்பட்டு மீண்டவர்கள் கொரோனாவின் டெல்டா வகை வைரசுக்கு எதிராக அதிக பாதுகாப்பைக் கொண்டுள்ளனர் என்பதை ஆய்வின் கண்டுபிடிப்புகள் நிரூபித்தன. மேலும் COVID-19 இன் டெல்டா மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பதில் humoral மற்றும் செல்லுலார் நோயெதிர்ப்பு தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது" என்று ஆய்வு கூறுகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டால், அது டெல்டா வகை வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் என்று தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு ஆய்வு, முடிவுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லும்.
Also Read | Covaxin செயல்திறன் அபாரம்! பாரத் பயோடெக்கின் ஆய்வு முடிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR