Fake Vaccination: மும்பை போலி தடுப்பூசி முகாம்; வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்க்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2021, 01:49 PM IST
  • இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • தடுப்பூசி போட்டுக் கொள்ள முதலில் தயக்கம் காட்டி வந்த மக்கள், இப்போது ஆர்வமாக போட முன் வருகின்றனர்.
  • மக்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, போலி தடுப்பூசி முகாம் நடத்தி பல லட்சம் ரூபாயை மோசடி.
Fake Vaccination: மும்பை போலி தடுப்பூசி முகாம்; வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்  title=

கொரோனா என்னும் கொடிய தொற்று நோய்க்கு ( Corona Pandemic) எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள முதலில் தயக்கம் காட்டி வந்த மக்கள், இப்போது ஆர்வமாக போட முன்வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, போலி தடுப்பூசி முகாம் நடத்தி பல லட்சம் ரூபாயை மக்களிம் வசூல் செய்து மோசடி செய்த மருத்துவமனை ஊழியர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் அடுத்தடுத்து பல போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பணமோசடி வேலைகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே குடியிருப்பு பகுதியில் மருந்துக்கு பதிலாக தண்ணீரை ஊசியில் நிரப்பி தடுப்பூசி (Corona Vaccine) போட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இண்டர் கோல்ட் கம்பெனியில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நான்கு வெவ்வேறு தேதிகளில், போலி தடுப்பூசி முகாம் (Fake Vaccination) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் 1,055 டோஸ் தடுப்பூசிகள் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இது தொடர்பாக  அந்தேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் 1,055 தொழிலாளர்களில் 48 பேருக்கு மட்டுமே தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதே போன்று  மும்பை சமதா நகரில் தனியாரால் நடத்தப்பட்ட முகாமில் 4 நிறுவனங்களைச் சேர்ந்த 618 தொழிலாளர்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களில் யாருக்கும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால், சந்தேகம் ஏற்பட்டதால், போலீஸில் புகார் அளித்தனர்.

 ALSO READ | Fake Vaccination என்றால் என்ன? போலி தடுப்பூசி மையத்தை எவ்வாறு கண்டறிவது?

இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மணீஷ் திரிபாதி என்னும் மருத்துவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, கோகிலா பென் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ராஜேஷ் பாண்டே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த போலி தடுப்பூசி முகாம்கள்  குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் விநோதமான என்னவென்றால், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி அவர்களே, இந்த மோசடிக்கு இரையாகி தடுப்பூசி போட்டுக் கொண்டது தான். கொல்கத்தாவில், மோசடி கும்பல் நடத்திய போலி தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட எம்.பி. மிமி உள்ளிட்ட பலருக்கு வயிற்று வலி, ரத்த அழுத்தக் குறைவு, நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

ALSO READ: COVISHIELD VACCINE: புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News