கோடை வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்தா நிலையில், முதியவர் முதல் குழந்தைகள் வரை எல்லாரும் பாதிக்கபடுவது இயல்பு. எனவே, கோடை காலத்தில் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடை வரி அனைத்தையும் நாம் பார்த்து பார்த்து பண்ண வேண்டிய நிலை உள்ளது. இவற்றில் நாம் கவனம் செலுத்தினாலே கோடையில் வரும் பல பிரச்சனைகளை நாம் தடுக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களிடம் தற்போது ட்ரெண்ட்-ஆகா இருப்பது லெகிங்ஸ் மற்றும் ஜீன்ஸ் தான். ஆனால், நாம் கண்டிப்பாக கோடையில் லெகிங்ஸ் மற்றும் ஜீன்ஸ் போடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.  


ஏனென்றால், வெயில் காலத்தில் தான் பெரும்பாலும் சரும மற்றும் தோல் நோய்கள் ஏற்படுகின்ற்றனர். பெண்கள் பயன்படுத்தும் லெகிங்ஸ் பொதுவாக பனியன் போன்ற துணியால் உருவாக்கப்படுகிறது. ஜீன்ஸ் துணியும் முரட்டுத்தன்மையுடன் இருப்பதால் அவை உடலில் இருந்து வெளிவரும் வியர்வையை உறிஞ்சாது. இதனால், உடலில்சுரக்கும் வியர்வை உடலிலே தங்கி, பூஞ்சையை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது. 


இதனால், அரிப்பு, படை, வியர்க்குரு, சிறிய கட்டிகள், தேமல் என ஆரம்பித்து, சின்னம்மை, மணல்வாரி அம்மை, அலர்ஜி, வயிற்றுப் பிரச்னை வரை செல்லும். தோலில் வியர்வைத் தங்குவதால், தோல் வறண்டு எரிச்சல் ஏற்படும். எனவே, காட்டன் ஆடைகளையே கோடை காலத்தில் நாம் பயண படுத்தலாம். அது மட்டுமல்ல நீங்கள் அணியும் ஆடை தளர்வாக இருக்க வேண்டும். 


இதிலும் சிலர் குளிர்ச்சியாக இருப்பதற்காக ஈரமான ஆடைகளை அணிவதும், குளித்ததும் உடலைச் சரியாகத் துவட்டாமல் ஆடை அணிந்து கொள்வது போன்ற பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இந்த பழக்கம் மிகவும் தவறான பழக்கம். ஏனெனில், ஈரமான ஆடைகள், பல்வேறு நோய் தொற்றுக்காளை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கலாம். 


கோடை காலத்தில் பெண்கள் மேக்கப் போடுவதை தவிர்க்கலாம். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு, மூன்று முறை தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். மேக்கப் போடும் சூழ்நிலை வந்தால், இரவில் படுக்கச் செல்லும் முன்பு முகத்தைச் சுத்தமாகக் கழுவிவிடவும். இதில் சிலருக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தியும் சருமப் பிரச்னை வரும்.


அனைவருக்கும் ஒரே மாதிரியான சன்ஸ்கிரீன் செட் ஆகாது. குழந்தைகளுக்கு ஜீங்க் ஆக்ஸைடு கலந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் எண்ணெய் தன்மை அற்ற சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். அதிலும் தங்கள் சருமத்துக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். 


எனவே, கோடை காலத்தில் லெகிங்ஸ் மற்றும் ஜீன்ஸ் உட்பட சில ஆடைகளுக்கு நீங்கள் டாட்டா சொல்லுவது நல்லது.