Diwali digestion tips Tamil | தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டினாலும், உணவில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த பந்தங்கள் எல்லாம் இனிப்பு, காரத்தை கொண்டு வந்து கொடுப்பார்கள். நீங்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் இனிப்பு, கார வகைகளை வகைவகையாக கொண்டு வந்து பிளேட்டில் அடுக்குவார்கள். ஆசையில் எல்லாவற்றையும் எடுத்து ருசி பார்க்க வேண்டும் என முண்டியடித்துவிடாதீர்கள். சாப்பிடுவதற்கு முன் உங்கள் உடல் நிலையை கருத்தில் கொள்ளுங்கள். அதனை பற்றியெல்லாம் எதையும் நினைக்காமல் சாப்பிட்டீர்கள் என்றால் நிச்சயம் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இங்கே பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனிப்பு, காரம் சாப்பிடுவதால் வயிற்றில் வரும் பிரச்சனைகள் 


அசிடிட்டி


இனிப்பு, காரம் அதிகமாக சாப்பிடும்போது அசிடிட்டி பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அதனை சரிசெய்ய நீங்கள் போராட வேண்டியிருக்கும். இதனால் உங்களின் தீபாவளி கொண்டாட்டம் மோசமானதாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. அசிடிட்டி பிரச்சனை வந்துவிட்டால் அதன்பிறகு நினைத்த நேரத்தில் எல்லாம் சாப்பிட முடியாமல் போகும். சில சமயங்களில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் கூட ஏற்படலாம்.


மேலும் படிக்க |  உடல் பருமனால் ஆண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள் இவைதான்


செரிமான பிரச்சனை


இனிப்பு அதிகம் சாப்பிடும்போது செரிமான பிரச்சனை ஏற்படும். வயிறு அப்செட்டாக்கி ஒருவிதமான அசௌகரியமாகவே இருப்பீர்கள். அளவுக்கு அதிகமாக இனிப்புகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. அதேபோல் காரத்தையும் தான். மிக்சர், முறுக்கு போன்றவற்றை சுவையாக இருக்கிறது என சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் வயிறு உப்புசம் ஏற்படும். கூடவே உப்பு சத்து அதிகரிப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறுநீரக பிரச்சனை உருவாக வாய்ப்பு இருக்கிறது. 


மலச்சிக்கல்


அதிக இனிப்பு, காரம் சாப்பிடும்போது நிச்சயம் மலச்சிக்கல் ஏற்படும். குடலில் உணவுகள் எல்லாம் தேங்கி வாய்வு பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். மலம் கழிக்க முடியாமல் எரிச்சல், புண் ஆகியவை எல்லாம் மல வாயில் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஒருமுறை இந்த புண்கள் வந்துவிட்டால் சரியாக வாரம் அல்லது மாத கணக்கு ஆகும். ஓரிரு நாள் கொண்டாட்டத்துக்காக உங்கள் உடல் நிலையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அதிகம் தண்ணீர் குடிக்கவும். பிஸியாக இருந்து தண்ணீர் குடிக்க மறந்துவிடாதீர்கள். 


கவனமாக இருக்க வேண்டியவர்கள்


ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கட்டாயம் இனிப்புகளை அதிகம் சாப்பிடவே கூடாது. இரத்த அழுத்தம் இருப்பவர்களும் தீபாவளி நாளில் சரியான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும் கட்டாயம் இனிப்பு எடுத்துக் கொள்ளக்கூடாது. இனிப்பு உடல் சோர்வை ஏற்படுத்தும். உங்களால் சுறுசுறுப்பாக செயல்படவே முடியாது. தூக்க பிரச்சனைகள், மன அழுத்தம் ஆகியவையும் வரலாம். அளவோடு சாப்பிட்டால் நிம்மதியாக இருக்கலாம். 


மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ