முழு கோதுமை முதல் பழுப்பு அரிசி வரை... சிறுநீரக பிரச்சனை இருந்தால் இவற்றுக்கெல்லாம் ‘NO’ சொல்லிடுங்க!

சிறுநீரக பாதிப்பு இருந்தால், உணவு கட்டுப்பாடுகள் மூலம், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் சேதத்தைத் தடுக்கலாம். இந்நிலையில், சிறுநீரக நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நமது உடலின் மிக முக்கிய அங்கங்களில் ஒன்றான சிறுநீரகம் இரத்தத்தை வடிகட்டுதல், சிறுநீர் மூலம் கழிவுகளை அகற்றுதல், ஹார்மோன்களை உற்பத்தி செய்தல், தாதுக்களை சமநிலைப்படுத்துதல் மற்றும் திரவ சமநிலையை பராமரிப்பது போன்ற முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்கிறது. கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம், குடிப்பழக்கம், இதய நோய், ஹெபடைடிஸ் சி வைரஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்று போன்ற காரணங்களால், சிறுநீரக பாதிப்பு மற்றும் நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீரக பாதிப்பு இருந்தால், உணவு கட்டுப்பாடுகள் மூலம், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் சேதத்தைத் தடுக்கலாம். இந்நிலையில், சிறுநீரக நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
முழு கோதுமை ரொட்டி
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான வகை சப்பாத்தி தேர்ந்தெடுப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான நபர்களுக்கு, முழு கோதுமை ரொட்டி பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட, மைதா மாவு பதிலான சிற்ந்த மாற்று உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. முழு கோதுமை ரொட்டி மிகவும் சத்தான உணவு தான் என்றாலும், அதன் அதிக நார்ச்சத்து காரணமாக, இது சத்தான உணவு (Health Tips) என்பதில் மாற்று கருத்து இல்லை. இருப்பினும், முழு கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டி பொதுவாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை அதிரிக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பழுப்பு அரிசி
பழுப்பு அரிசியில் அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளது. எனவே சிறுநீரக நோய் அல்லது பாதிப்பு உள்ளவர்கள் இதை உண்பதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்த உணவு. சிறுநீரக நோயாளிகள் அதிக அளவில் பொட்டாஷையம் நல்லதல்ல. சிறுநீரக டயட் உணவில் பொட்டாஷியம் குறைவாக உள்ள உணவுகளே கொடுக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக அன்னாசிப்பழத்தினை தேர்வு செய்யலாம். ஏனெனில் இது மற்ற வெப்பமண்டல பழங்களை விட மிகக் குறைவான அளவு பொட்டாசியம் கொண்டது.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் அதிக அளவு பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதம் உள்ளது. சிறுநீரக டய்ட் உணவில் இந்த சத்துக்கள் குறைவாக இருக்க வேண்டும். பாலில் கால்சியம் அதிகம் இருந்தாலும், அதில் உள்ள பாஸ்பரஸ், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகளை பலவீனப்படுத்தும்.
சோடா பானங்கள்
சோடா பானங்கள் பொதுவாகவே ஆரோக்கியம் அற்றவை. இவற்றில், கலோரிகள் மற்றும் சர்க்கரை மிக அதிகமாக உள்ளது என்பது ஒரு முக்கிய காரணம். அதோடு, சோடாவில் பொட்டாசியம் உள்ளது. பல நாட்களுக்கு வைத்திருக்கக் கூடிய உணவுகள் மற்றும் பானங்களில் சுவையை அதிகரிக்கவும், அதன் ஆயுளை நீட்டிக்கவும், நிறமாற்றத்தைத் தடுக்கவும் செயலாக்கத்தின் போது பாஸ்பரஸ் சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் உடல், இந்த கூடுதல் பாஸ்பரஸை இயற்கையான, விலங்கு அல்லது தாவர அடிப்படையிலான பாஸ்பரஸை விட அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடியது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் உள்ளது, ஏனெனில் அவற்றின் ஆயுளை நீட்டிக்க உப்பு ஒரு பிரிசர்வேடிவ் ஆக சேர்க்கப்படுகிறது. பதப்படுத்தபட்ட பொருட்களில் காணப்படும் சோடியத்தின் அளவு காரணமாக, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும் அல்லது கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
வெண்ணெய் பழங்கள்
வெண்ணெய் பழங்கள் இதய ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களை கொண்ட மிக ஆரோக்கியமான உணவு தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. வெண்ணெய் பழங்கள் பொதுவாக உணவில் ஆரோக்கியமான சேர்க்கையாக இருந்தாலும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டியிருக்கலாம். ஏனென்றால், வெண்ணெய் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
சிறுநீரகங்கள் பழுதடைந்து, சரியாக செயல்படத் தவறினால், உடலில் திரவம் உருவாகி, இரத்தத்தில் கழிவுகள் சேரும். இருப்பினும், உங்கள் உணவில் சில உணவுகளைத் தவிர்ப்பது இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களைக் குறைக்கும்.
மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ