இந்தியாவில் பல வகையான கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. கீரைகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேற்று ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களை அதிகளவில் உள்ளன. ஒரு கப் சமைத்த கடுகு கீரையில் வைட்டமின் கே தினசரி மதிப்பில் 691.50 சதவீதம் உள்ளது. கீரையை சமைத்து சாப்பிடும்போது அதன் ஊட்டச்சத்து பயன்கள் நமக்கு அப்படியே முழுவதுமாக கிடைக்கிறது.
எனவே, உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமான கீரைகளில் முக்கியமான கடுகுக்கீரையை வாரத்தில் ஒரு முறையாவது அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரையை பொரியலாக தனியாக செய்தும் சாப்பிடலாம், அதேபோல, பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்து மேலும் அதிகரிக்கும்.
கடுகு கீரையின் ஆரோக்கிய நன்மைகள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே
மாங்கனீசு
ஃபோலேட்
வைட்டமின் ஈ
மேலும் படிக்க | வாழைப்பழத்தை பத்தி தெரியும்! ஆனா வாழைப்பழத்தோல் போக்கும் நோய்கள் எதுன்னு தெரியுமா?
இப்படி பலச்சத்துக்களைக் கொண்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்க உதவுகின்றன, செல் சவ்வுகளை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள், இதய நோய், புற்றுநோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற தீவிரமான, நாள்பட்ட நிலைமைகளுக்கு வழிவகுக்கும். எனவே கடுகுக்கீரையை அனைவரும் உட்கொள்ள வேண்டும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் கடுகுக்கீரை
யூரிக் ஆசிட் போன்ற எலும்பு தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்துகிறது. உடலில் உருவாகும் யூரிக் அமிலத்தை சிறுநீரகம் உடனடியாக வெளியேற்றும் நார்ச்சத்தும் அதிகமாக கொண்ட கடுகுக்கீரை, பிற கீரைகளை விட அதிக பலனைத் தருகிறது.
கீல்வாதத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது
கடுகு கீரைகள் அவற்றின் அழற்சி எதிர்ப்பு திறன்களின் காரணமாக, கீல்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் விறைப்புத்தன்மையைப் போக்க உதவுகிறது. தசை வலிமையை மேம்படுத்தவும், மூட்டு வலியைக் குறைக்கவும், இணைப்பு திசுக்களை சரிசெய்யவும் கடுகு கீரை உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம்
கடுகுக்கீரையில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளதால், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களை தவிர்க்க உதவும். வைட்டமின் கே அதிகமாக உட்கொள்வது எலும்பு இழப்பை நிறுத்தலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் படிக்க | Uric Acid: இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகிவிட்டதா? பிரச்சனையை தீர்க்க வழிகள் இவை
மூளை செயல்பாட்டிற்கும் புற்றுநோய் எதிர்ப்பிற்கும் கடுகுக்கீரை
இது மூளை செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது மற்றும் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கிறது. கடுகு கீரைகளை அதிக அளவில் உட்கொள்வதால், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு, மூக்கு மற்றும் வாய்வழி புற்றுநோய்கள் உள்ளிட்ட சில புற்றுநோய்களின் ஆபத்து குறைகிறது.
கண் ஆரோக்கியத்திற்கு கடுகுக்கீரை
கடுகு கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் ஏ இன் குறைபாடு விழித்திரையில் உள்ள ஒளிச்சேர்க்கை செல்கள் சரியாக வேலை செய்வதற்குத் தேவையான சில நிறமிகளின் உற்பத்தியை நிறுத்துகிறது, இதனால் இரவு குருட்டுத்தன்மை ஏற்படலாம். எனவே கடுகுக் கீரையை உண்பதால், கண் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
செரிமானத்தை சீராக்கும் கடுகுக்கீரை
கடுகுக் கீரையில் செரிமான அமைப்பில் பித்த அமிலங்களை பிணைக்க உதவும் கலவைகள் உள்ளன, இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிறுநீர் கற்கள் வராமல் தடுக்கிறது
வைட்டமின் ஏ நிறைந்த கடுகு கீரையை தொடர்ந்து உட்கொள்வது கால்சியம் பாஸ்பேட் திரட்சியைத் தடுப்பதன் மூலம் சிறுநீர் கால்குலி உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ