தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க
Weight Loss Mistakes: அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எடை இழப்பு என்ற பெயரில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, இது உடலுக்கு நன்மைகளை விட அதிக தீங்கு விளைவிக்கும்.
உடல் எடையை குறைப்பது எப்படி: இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை கொழுப்பு தான். இதிலிருந்து விடுபட, பலர் ஜிம்மில் பயிற்சி, டயட், கடுமையான உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்கின்றனர். இருப்பினும் சரியான முடிவை பெறுவதில்லை. அதிலும் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும். மேலும் தொப்பை கொழுப்பு ஒரு நபரின் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் மற்றும் பொது இடத்தில் சங்கடத்தை சந்திக்க நேரிடும். எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளும் போது, சில விஷயங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியம். அதிலும் முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டிருப்பது போன்ற சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்
மோசமான தூக்க பழக்கம்
உங்கள் எடை அதிகரிப்பதைத் தடுக்க விரும்பினால், உங்கள் தூக்கப் பழக்கத்தை சரிசெய்துக் கொள்ளுங்கள். உண்மையில், உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் 7-8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் தேவை. இதை விட குறைவாக தூங்கினால், உடல் சமநிலையற்றதாகி, எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
தேவையானதை விட குறைவான கலோரிகளை உட்கொள்வது
அதிகரித்து வரும் உடல் கொழுப்பைக் குறைக்க பலர் டயட் செய்யத் தொடங்குகிறார்கள். குறைவாக சாப்பிட்டால் உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உடலின் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு கலோரிகள் தேவை. நீங்கள் குறைவான கலோரிகளை எடுத்துக் கொண்டால், அது செரிமான அமைப்பைக் குழப்பி, உங்கள் செல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்
தொப்பையை குறைக்க அரை மணி நேர உடற்பயிற்சி மட்டும் பலன் தராது, இதற்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இதற்காக, உங்கள் பணியிடத்தில் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல், இடையில் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உண்ட உணவு செரிமானமாகி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தற்செயலாக அதிகமாக சாப்பிடுவது
உடல் எடை அதிகரிப்பதால் பலர் சர்க்கரையை தவிர்க்கின்றனர். ஆனால், சிலர் சர்க்கரை சேர்க்கப்பட்ட சில உணவுகளை உட்கொள்வதை நிறுத்துவதில்லை. பேக் செய்யப்பட்ட உணவுகள் தவிர, பேரீச்சம்பழம், பழுப்பு சர்க்கரை, வெல்லம் மற்றும் இயற்கை சர்க்கரை போன்ற பொருட்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ