'ஸ்லோ பாய்சன்’ சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க சுலபமான வழிகள்

Cut Sugar From your diet: சர்க்கரை என்ற ஸ்லோ பாய்சனை உணவில் இருந்து நீக்குவது அவசியம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். நமது உணலிருந்து சுலபமாக இதை வெளியேற்றுவது எப்படி?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 23, 2023, 04:53 PM IST
  • உணவில் இருந்து சர்க்கரையை நீக்கும் முறைகள்
  • சர்க்கரையை தவிர்க்கும் வழிகள்
  • சர்க்கரைக்கான மாற்று வழிகள் ஆனால் மிகவும் சுலபமானவை
'ஸ்லோ பாய்சன்’ சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க சுலபமான வழிகள் title=

உணவில் சர்க்கரையைக் குறைப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஏனென்றால், சர்க்கரை என்பது ஸ்லோ பாய்சன் என்று ஆய்வுகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த மெதுவாக கொல்லும் விஷத்தை நமது உணவில் இருந்து நீக்குவது அவசியம். நமது உணலிருந்து சுலபமாக சர்க்கரையை வெளியேற்றுவது எப்படி?  

உண்மையில் நமது வாழ்க்கையிலிருந்து சர்க்கரையை வெளியேற்றுவது மிகவும் எளிதானது என்று நினைத்தால், அது முற்றிலும் தவறு. நமது அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சர்க்கரை பயன்பாடானது, இரத்த சர்க்கரையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி சர்க்கரையின் காரணமாக வயதாகும் செயல்முறை துரிதமாவதோடு, மனநலமும் பாதிக்கப்படும். விரும்பினால் கூட உணவில் இருந்து சர்க்கரையை நீக்க முடியாவிட்டால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நமது உணவு மற்றும் வாழ்க்கையிலிருந்து இந்த ஸ்லோ பாய்சனை  வெளியேற்ற உதவும் டிப்ஸ் இவை.

மேலும் படிக்க | கோடையிலும் பிரிட்ஜில் இந்த பழங்களை மறந்துகூட வைக்காதீங்க..
 
உணவு லேபிளை சரிபார்க்கவும் 
சந்தையில் இருந்து எந்த உணவையும் வாங்கும் போது, ​​அதன் லேபிளை சரிபார்க்க மறக்காதீர்கள். அந்த உணவில் உள்ள சுக்ரோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் மால்டோஸ் போன்ற சர்க்கரை பற்றிய அனைத்து தகவல்களும் லேபிளில் கொடுக்கப்பட்டிருக்குக்ம். இவை உங்கள் உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பவை, எனவே அவை இருக்கும் உணவுகளை தவிர்க்கலாம்.
 
பழங்கள் மற்றும் காய்கறிகள்
முடிந்தவரை புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையான சர்க்கரை இருக்கும். எனவே, இதை நமது உடல் மிக மெதுவாக உறிஞ்சுகிறது, இதுதான் ஆரோக்கியமானது. மறுபுறம், பிற உணவுகளில் உள்ள சர்க்கரை நேரடியாக உங்கள் இரத்தத்தில் கரைந்து உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
 
இயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சர்க்கரைக்குப் பதிலாக, வெல்லம் அல்லது தேனைப் பயன்படுத்தி உணவை இனிப்பாக தயாரிக்கலாம். இனிப்பு தயாரிக்க சர்க்கரைக்கு பதிலாக, உலர் பழங்கள் மற்றும் இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. எனவே இயற்கை வழிகளில் சர்க்கரையை முயற்சிக்கவும்.

மேலும் படிக்க | கண் பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்! ஆரோக்கியமான கண்களுக்கு இவை அவசியம்
 
சர்க்கரை பானங்களைத் தவிர்க்கவும்
அனைத்து சர்க்கரை பானங்களிலும் நிறைய சர்க்கரை உள்ளது, சோடா, பழச்சாறு அல்லது ஆற்றல் பானங்கள் என அனைத்தும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதற்கு பதிலாக, தண்ணீர், க்ரீன் டீ, மூலிகை தேநீர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவை மிகவும் ஆரோக்கியமானவை.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணாதீர்கள்
பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. ரொட்டி, மைதாவில் செய்யப்பட்ட பர்கர் போன்றவை மற்றும் பாஸ்தா சாஸ் என பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.

எனவே இதுபோன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். இந்த உணவுகளுக்கு பதிலாக, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவை இயற்கை சர்க்கரையின் ஆரோக்கியமான ஆதாரங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News