நம்மில் பலருக்கு உணவுக்கு பின் ஏதாவது சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதன் காரணமாக உணவு உண்ட பிறகும் விரும்பும் வெவ்வேறு உணவுகளை உட்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். சிலர், தவறான உணவுகளைக் கூட உணவுக்குப் பின் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் பல பக்கவிளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது குறித்த விழிப்புணர்வுகளை அனைவரும் பெற்றிருப்பது அவசியம். உதாரணமாக, ஒருவர் உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பார். இதனால் உணவு ஜீரணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதேபோல் சாப்பிட்ட பிறகு என்னென்ன சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபி அல்லது டீ


சாப்பிட்ட உடனேயே காபி அல்லது டீ சாப்பிடுபவர்கள் அதிகம். இதில் இருக்கும் நிகோட்டின் ரத்த சிவப்பணுக்களின் அளவைக் குறைக்கக்கூடியது. சாப்பிட்டவுடன் உடலுக்கு தேவையான புரதம் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், டீ சாப்பிடும்போது, நிக்கோடின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைக்கும் எதிர்மறை செயலில் ஈடுபடும். இனால், சாப்பிட்டவுடன் டீ காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். 


மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி


பழங்கள் வேண்டாம்


உணவு உண்ட உடனே பழங்களை உட்கொள்ளக் கூடாது. இப்படிச் செய்வதால் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, பழங்களில் உள்ள சத்துக்களின் முழுப் பலனையும் உங்கள் உடலும் பெறாது. ஒரு நபர் சாப்பிட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்ள வேண்டும்.


தண்ணீர் குடிக்கக்கூடாது


ஏற்கனவே கூறியது போல், உணவு உண்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. எந்த உணவுகளை சாப்பிட்ட பிறகுத் திரவமான பானங்களை அருந்தத்கூடாது. இது செரிமான அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், ஒரு நபருக்கு உணவை ஜீரணிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். சாப்பிட்ட பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | மலச்சிக்கல் முதல் குடல் எரிச்சல் வரை: குடல் பிரச்சனைகளுக்கு காரணமாகும் மழைக்காலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ