இரவு நேரத்தில் இந்த உணவையெல்லாம் தவிர்த்துவிடுங்கள்
கொழுப்பு, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவில் தவிர்த்துவிடுவது நல்லது.
ஒரு மனிதனின் உடலுக்கு அவசியமானது உணவு. அதற்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த உணவையும் உண்ணலாம் என்ற நினைப்பில் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்தந்த நேரத்துக்கு தகுந்த ஏற்றவாறு உணவு உண்பதே சிறந்தது. அப்படி இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பல இருக்கின்றன. அவற்றில் சிலவைகளை பார்க்கலாம்.
கார உணவுகள்:
கார உணவுகள் பொதுவாகவே உடல்நலத்திற்கு அவ்வளவு ஆரோக்கியமில்லை. அதிலும் இரவு நேரங்களில் அதை சாப்பிட்டால் மேற்கொண்டு சிக்கல்தான். அதில் உள்ள 'காப்சைசின்' என்ற கலவை செரிமான பிரச்னைகளை உண்டாக்குவதுடன், நெஞ்செரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.
பழ வகைகள்:
பழங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதுதான். அதேசமயம் இரவில் தவிர்க்க வேண்டிய பழங்களும் இருக்கின்றன. அந்தவகையில், வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி வகை பழங்கள், நெல்லிக்காய், செர்ரி பழங்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | மூளை புற்றுநோயின் 7 சைலண்ட் அறிகுறிகள்: தொடர்ந்து தலைவலிக்கிறதா? கவனம்
இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பல நன்மைகளை அளிக்கும். ஆனால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது உடலை தொடர்ந்து புத்துணர்வாக வைத்திருக்கும். இதனால் சீரற்ற தூக்கம், செரிமான பிரச்னை மற்றும் சளிக்கு வழிவகுக்கும்.
நீர்ச்சத்து உணவுகள்:
பழ வகைகளை போல் நீர்ச்சத்து உணவுகளையும் இரவில் தவிர்க்கலாம். அதாவது, வெள்ளரி, தக்காளி, சவ்சவ், புடலங்காய், ஆரஞ்சு, திராட்சை போன்றவை தவிர்ப்பதால் சிறுநீர்ப்பை நிறைவதை தடுக்கும். இதன் மூலம் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை தவிர்க்கலாம்.
அதுமட்டுமின்றி உள் உறுப்புகளின் இயக்கம் மற்றும் உடலில் உள்ள செல்களை புத்துணர்வாக்குவதால், இரவு நேரத்தில் தன்னிச்சையாக ஏற்படும் தூக்கத்துக்கான சுழற்சியில் தடை ஏற்படும்.
கொழுப்பு உணவுகள்:
கொழுப்பு உணவுகள் எப்போதுமே ஆபத்துக்கு உரியதுதான். குறிப்பாக எண்ணெயில் வறுத்த உணவுகள், சீஸ் மற்றும் துரித உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டால், சரியான செரிமான இல்லாமல் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை உருவாகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR