Weight Loss Diet: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக மாறி வருகின்றது. எடை இழப்பில் நாம் உட்கொள்ளும் உணவுகளின் பங்கு  அதிகமாக உள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள் கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றன. தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதில் நாம் காட்டும் அதே அளவு கவனத்தை நாம் எதை சாப்பிடக்கூடாது என்பதிலும் செலுத்த வேண்டும். உடல் எடையை குறைக்க நாம் இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக கொழுப்புள்ள உணவுகள்: கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், குறிப்பாக ஆரோக்கியமற்ற செறிவூட்டப்பட்ட மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும். மேலும் இவை ஜீரணமாகவும் அதிக நேரம் எடுக்கும். இரவில் அவற்றை உட்கொள்வதால் செரிமானம் மிக மெதுவாக நடக்கும். உடல் அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைக்கும். வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த இறைச்சிகள். முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது. 


மேலும் படிக்க | கல்லீரலை சுத்தமாக்கும் ஆரோக்கிய உணவு முறைகள்!


சர்க்கரை: அதிக சர்க்கரை உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது தூக்கத்தை சீர்குலைத்து பசியை தூண்டும். சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகள், சோடாக்கள், இனிப்பு பழச்சாறுகள் மற்றும் மிட்டாய்களை இரவில் தவிர்ப்பது நல்லது. 


காரமான உணவுகள்: காரமான உணவுகள் அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது தூக்கத்தையும் சீர்குலைக்கும். இது உங்கள் உறக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். மேலும் இவை இரவில் பசியை தூண்டக்கூடும். 


உணவின் அளவு: உறங்கும் முன் அதிக அளவில் உணவை உட்கொள்வது நல்லதல்ல. இது உடலின் செரிமான அமைப்புக்கு பெரும் சவாலாக அமைகின்றது. கூடுதலாக, இது அசௌகரியம், வீக்கம் மற்றும் தூக்கத்தை சீர்குலைக்கும். மெலிந்த புரதங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உள்ளடக்கிய சிறிய, சீரான உணவுகளை உட்கொள்வது நல்லது. 


காபி, டீ: காஃபி, டீ, கஃபைன் கலந்த பானன்கள், எனர்ஜி பானங்கள் ஆகியவற்றை இரவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவற்றால் தூக்கம் கெடுவதுடன் செரிமான அமைப்புக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இவற்றுக்கு பதிலாக மூலிகை தேநீர், கிரீன் டீ, மஞ்சள் பால் போன்றவற்றை உட்கொள்ளலாம். 


இவற்றைத் தவிர இரவில் பசித்தால், கேரட், வெள்ளரி, வெங்காயம் ஆகிய காய்கறிகள் அடங்கிய சாலட் சாப்பிடுவது நல்லது. இவற்றில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாகவும் உள்ளன. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்கும் ஆயுர்வேத மூலிகைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ