வெயில் காலத்தில் இந்த 4 பொருட்களை அதிகம் சாப்பிடுவது ஆபத்தாகலாம்: ஜாக்கிரதை
Spices To Avoid In Summer: அதிகப்படியான நுகர்வினால் பிரச்சனைகளை உண்டாக்கும் மசாலாப் பொருட்கள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
கோடையில் தவிர்க்க வேண்டிய மசாலாப் பொருட்கள்: காய்கறிகளின் சுவையை அதிகரிப்பதில் மசாலாப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், அனைத்து பருவங்களிலும் மசாலாப் பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதையே செய்யும் என்று சொல்ல முடியாது. சில மசாலாப் பொருட்களை கோடையில் சாப்பிடுவது நல்லதல்ல.
இருப்பினும், நீங்கள் இந்த மசாலாப் பொருட்களை குறைந்த அளவில் உட்கொண்டால், எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆனால் சில மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான நுகர்வினால் பிரச்சனைகளை உண்டாக்கும் மசாலாப் பொருட்கள் என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
1. மஞ்சளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்
மஞ்சள் மனித உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் அதை அதிக அளவில் பயன்படுத்தினால், அதனால் வரும் கேடுகளையும் அனுபவிக்க நேரிடலாம். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் மஞ்சளை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அந்த காலங்களில் மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்தினால், அதிக இரத்தப்போக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க
2. துளசி உட்கொள்ளலைக் குறைக்கவும்
கோடையில், துளசி-யையும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள். துளசியை அதிகமாக உட்கொண்டால், அது பெண்களின் கருவுறுதலையும் பாதிக்கும்.
3. இலவங்கப்பட்டை உபயோகத்தை குறைக்கவும்
இலவங்கப்பட்டை பலவித நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும் அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் வாயில் கொப்புளங்கள் ஏற்படலாம். மேலும், இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும்.
4. கருப்பு மிளகு
கருப்பு மிளகு பெரும்பாலும் காய்கறிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது எடையைக் குறைக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு நபருக்கு இரத்த உறைவு பிரச்சனை இருந்தால், கருப்பு மிளகு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது, அதனால் பாதிப்புகள் வரக்கூடும் என்பதை தெரிந்துகொள்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: முட்டைகளை தண்ணீரில் கழுவக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR