COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நமது உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றும் பணியை செய்கிறது. நமது சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால், உடலில் நச்சுப் பொருட்கள் சேர்ந்து, பல உடல் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் தான் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது நச்சு நீக்குவது மிகவும் அவசியம். இன்று, இந்த கட்டுரையின் மூலம், ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுநீரகத்தை நச்சு நீக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். அதைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சிறுநீரகத்தை முழுமையாக சுத்தம் செய்யலாம்.


1. சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் சில மூலிகைகள்


நீங்கள் உங்கள் சிறுநீரகத்தை திறம்பட சுத்தம் செய்ய விரும்பினால், சில ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு பெரிதும் உதவும். இதற்கு  டான்டேலியன் வேர் மிகவும் உதவும். சிறுநீரகத்தில் சேரும் அனைத்துவித அழுக்குகளையும் சுத்தம் செய்ய இந்த வேர் உதவுகிறது. சிறுநீர் உற்பத்தியை சீரான முறையில் வைக்கவும், கற்கள் சேரவிடாமலும் பாதுகாக்கும். மேலும் இந்த வேரை சுடு நீரில் போட்டு குடித்து வந்தால், உடலில் ஏற்படும் நீர் கடுப்பு போன்றவற்றையும் விரைவில் குணப்படுத்தும். அதே போன்று, உங்கள் கிட்னியில் ஏற்படும் வீக்கம் மற்றும் நோய் தொற்றுக்களை குணப்படுத்த கூடியது. மஞ்சள் கிட்னியில் கற்கள் சேர விடாமல் காக்கும். மற்றோரு மூலிகையான செலரியில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் கிட்னியில் சுரக்கும் டானிக்குகளை நன்றாக சுரக்க தூண்டுகிறது. மேலும் நச்சு பொருட்கள் கிட்னியில் (Kidney Detox) சேருவதை தடுக்கிறது.


2. மன அழுத்தத்தைக் குறைக்கவும்


ஆயுர்வேதத்தின் படி, நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணம். இதனால் தான் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு நீங்கள் யோகா மற்றும் தியானத்தின் உதவியையும் பெறலாம்.


3.  உடல் எடை கட்டுப்பாடு


உடல் பருமன் நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கிறது. அதிக எடையுடன் இருப்பது நமது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது சிறுநீரகத்தின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கிறது. நீங்கள் அதிக எடையுடன் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், இன்றிலிருந்து உங்கள் எடையைக் குறைக்கத் தொடங்குங்கள்.


மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ


4. வலி நிவாரணிகளை பயன்படுத்துவதை தவிர்க்கஃ வேண்டும்


சிறு பிரச்சனைகளுக்கு வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், உங்கள் இந்த பழக்கம் உங்கள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்வது நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.


5. நிறைய தண்ணீர் குடிக்கவும்


ஆயுர்வேதத்தில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உங்கள் உடலில் நீர் சத்து பற்றாக்குறை இருந்தால், சிறுநீரகத்தின் வடிகட்டுதல் வேலை சரியாக செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக சிறுநீரக ஆரோக்கியம் மோசமடையலாம். உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.


மேலும் படிக்க | உயிரற்ற நரம்புகளுக்கும் உயிர் கொடுக்கும் ‘மேஜிக்’ மசாலா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ