Uric Acid Control: மனிதனின் வாழ்க்கை நவீனமயமாகி வருகின்றது. வாழ்வின் வேகம் அதிகரித்து வருகின்றது. வேகமான இந்த வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பல வித நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய், யூரிக் அமிலம், இரத்த அழுத்தம் என இவை அனைத்தும் தவறான வாழ்க்கை முறையால் உருவாகும் நோய்களாக பார்க்கப்படுகின்றன.
சமீப காலங்களில் யூரிக் அமில அளவு அதிகமாகும் நிலை பலரிடம் பரவலாக காணப்படுகின்றது. அவசர வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவுகள் ஆகியவை இதற்கும் முக்கிய காரணங்களாக உள்ளன. பிஸியான வாழ்க்கையில், நம்மில் பெரும்பாலானோர், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளை நம்பி இருக்கிறோம். ஆனால், இவற்றால் நமக்கு எந்த வித ஊட்டச்சத்தும் கிடைப்பதில்லை. மாறாக பல பக்க விளைவுகளே ஏற்படுகின்றன. அந்த பக்க விளைவுகளில் யூரிக் அமில அதிகரிப்பும் ஒன்று. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அதனால், மூட்டுவலி, வீக்கம், சிறுநீரக கற்கள் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்குகின்றன.
யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். ஆரொக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடலில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம். இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்:
பாகற்காய் சாறு
பாகற்காய் (Bitter Gourd) என்ற பெயரைக் கேட்டவுடனே சிலர் நாவில் கசப்பு சுவையை அனுபவிப்பார்கள். ஆனால், இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கசப்பு சுவை கொண்ட பாகற்காய் வாழ்விற்கு பல நல்ல விஷயங்களை அளிக்கின்றது. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சஞ்சீவியாக உதவுகின்றது. ஆனால், யூரிக் அமில நோயாளிகளுக்கும் இது பயன் தரும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
பாகற்காயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். மேலும் இது உடலில் உள்ள வீக்கம், வலி ஆகியவற்றையும் குறைக்கும் தன்மை கொண்டது. இதை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடும் சீராக இருக்கும். யூரிக் அமில நோயாளிகள் தினமும் பாகற்காய் சாறு குடித்து வந்தால், யூரிக் அமில அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள் பால்
உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் மஞ்சள் (Turmeric) பால் குடிக்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கின்றது. மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் அதிகமாக உள்ளன. தினமும் மஞ்சள் பால் குடிப்பது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றுவதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. இதை குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களையும் இயற்கையான வழியில் வெளியேற்றலாம்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை எரிக்கும் ராகி... சில சுவையான ரெஸிபிகள் இதோ
இஞ்சி தேநீர்
இஞ்சி (Ginger) உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இது யூரிக் அமில நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க தினமும் இஞ்சி டீ குடிக்கலாம். இஞ்சியில் ஆண்டி-செப்டிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த பண்புகள் உடலில் யூரிக் அமில அளவை குறைக்கின்றன.
தினமும் சரியான அளவு இஞ்சி டீ குடிப்பது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சிறிது இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். யூரிக் அமில அளவு குறைவதோடு, இதனால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளிலும் நிவாரணம் கிடைக்கும்.
இவை அனைத்தும் யூரிக் அமில அளவை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள். எனினும், அதிக யூரிக் அமிலத்திற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்கள், தங்களது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்த பானங்களை உட்கொல்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை... பொட்டுக்கடலையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ