கொலஸ்ட்ராலை கரைக்கணுமா? இவற்றை உடனே உங்கள் உணவில் சேர்க்கவும்
கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம்.
கொலஸ்ட்ரால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. நீங்கள் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் அதிக செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக, உடலில் 'கெட்ட கொலஸ்ட்ரால்' உருவாகத் தொடங்குகிறது.
கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். நல்ல கொழுப்பு செல்களை உருவாக்குவதற்கும் வைட்டமின்கள் மற்றும் பிற ஹார்மோன்களை உருவாக்குவதற்கும் அவசியம். ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலை பல வழிகளில் சேதப்படுத்துகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் மூலம் மாரடைப்பு வரக்கூடும்
கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் தங்கி, அவற்றில் இரத்த ஓட்டத்தை கடுமையாகத் தடுக்கிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயாளியாகவோ, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவராகவோ நீங்கள் இருந்தால் உங்கள் ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது. ஆகையால் இரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்ற எந்த வகையான புரதம் உதவியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும அவசியமாகும்.
பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் உணவில் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றும் விஷயங்களைச் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதற்கு பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவது நன்மை பயக்கும். அனைத்து வகையான பருப்பு வகைகளிலும் நிறைவுற்ற கொழுப்பின் அளவு மிகக் குறைவாக உள்ளது.
மேலும் படிக்க | தொப்பை குறையவில்லையா? இந்த 3 முக்கிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
அவற்றில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். பல்வேறு வகையான பருப்பு வகைகளில் உள்ள புரதத்தின் அளவும் வேறுபட்டிருக்கும். பருப்பு வகைகள் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றுவதில் அதிக அளவு நன்மை அளிக்கின்றன.
கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் பாதாம் உதவுகிறது
பாதாம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஒரு சஞ்சீவியாகவும் இருக்கும் என்பது மிகச் சிலருக்கே தெரியும். கொலஸ்ட்ராலை குறைக்க பாதாம் ஒரு நல்ல ஆரோக்கியமான உலர் பழமாக உதவுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
இது தவிர, உங்கள் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதைக் குறைக்க ஓட்ஸ் சாப்பிடலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளில் ஓட்ஸ் மிகச்சிறந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் எடையைக் குறைக்க எளிமையான 3 வழிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR