பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். அதிக வேலைச் சுமை, போதுமான தூக்கம் இல்லாத நிலை, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல்  போன்ற பல காரணங்களால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இது முகத்தை பொலிவிழக்கச் செய்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், குறைவான கொலாஜன் உற்பத்தி கண்களுக்குக் கீழே கரு வளையங்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே கொலாஜன் உற்பத்தி செய்யும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.


முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, வயதான தோற்றத்தையும் கொடுக்கும் கருவளையங்களை விரட்ட சில எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.


கருவளையத்தை போக்க இரசாயன அடிப்படையிலான மருந்துகளால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்றாலும், முகத்தின் சருமங்கள் மிகவும் சென்ஸிடிவ் ஆனது என்பதால், சில பக்க விளைவுகள் ஏற்படலாம். அதனால் வீட்டு வைத்தியம் மிகவும் சிறந்தது. செலவில்லாத சில எளிய வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


1. குளிர்ச்சியான டீ பேக் சிகிச்சை


குளிர்ச்சியான தேநீர் பைகள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களையும் நீக்கும். தேநீர் பையை தண்ணீரில் ஊறவைத்து, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதன் பிறகு கண்களை மூடி அந்த டீ பேக்கை கருவளையத்தில் வைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.


மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்


2. உருளைக்கிழங்கு


பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு கருவளையம் உள்ள சரும பகுதியில் தடவ வேண்டும். உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்த துணியால் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவவும்.  


3. தக்காளி


கருவளையங்களை போக்குவதில் தக்காளி ஒரு சஞ்சீவி போல் செயல்படுவதோடு, சருமத்தை மென்மையாக்குகிறது. ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து , கருவளையங்கள் மீது தடவி 10 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும். இது தவிர தக்காளி ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் என தினமும் குடித்து வந்தால் கருவளையம் விரைவில் நீங்கம்.


4. குளிந்த பால் சிகிச்சை


குளிர்ச்சியான பால் கருவளையத்தை நீக்குகிறது என்பதோடு, கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும். குளிர்ந்த பாலை பருத்தி துணியில் ஊறவைத்து, கண்களின் கருவளையத்தில் வைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.


5. ஆரஞ்சு சாறு


ஆரஞ்சு சாறு மூலம் கருவளையங்களை நீக்கலாம். ஆரஞ்சு சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள் பயன்படுத்துவதன் மூலம், கருவளையங்கள் படிப்படியாக குறையும். இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR