நாள் முழுவதும் ஏசியில் இருக்கீங்களா... பாதிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்
நாள் முழுவதும் ஏசியில் இருப்பதால் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் ஏற்படுகின்றன.
கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
அந்த வழிகளில் ஏசிக்குள் தஞ்சம் அடைவதும் ஒன்று. நாள் முழுவதும் ஏசியில் இருப்பதால் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம் ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை கவனிக்காமல் விடுவது ஆபத்திலேயே முடிகிறது.
மேலும் படிக்க | மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்... உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
ஏசியில் தொடர்ந்து இருப்பதால் கண்கள் வறட்சி அடைவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கண்களுக்கு ஈரப்பதம் கிடைக்காததால் இந்த வறட்சி ஏற்படுகிறது. கண் வறட்சி இருபப்வர்கள் ஏசியில் அமர்ந்தால் அவர்களுக்கு அந்தப் பிரச்னை அதிகரிக்கவே செய்யும்.
ஏசி நமது உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்தாலும் நாம் இருக்கும் அறையில் இருக்கும் ஈரப்பதத்தை ஏசி உறிஞ்சிவிடும். இதனால் உடல் வறட்சி நிலைக்கு செல்லும். எனவே ஏசியில்தானே அமர்ந்திருக்கிறோம் எதற்காக தண்னீர் குடிக்க வேண்டும் என நினைக்காமல் தொடர்ந்து நீர் அருந்துவது அவசியம்.
அதுமட்டுமின்றி மூக்கு, தொண்டை ஆகிய பாகங்களில் ஏசி பிரச்னையை உருவாக்குவதால் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுவாச பிரச்னை உருவாகும்.
மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்
மிகமுக்கியம் ஏசியை சுத்தம் செய்வது. ஏசியை அடிக்கடி முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்றால் அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும். ஏற்கனவே இந்தப் பிரச்னைகளை சந்திப்பவர்கள் ஏசி அறையை தவிர்த்துவிடுவதுதான் நல்லது.