Jio vs Airtel vs Vi: 1ஜிபி டேட்டா இப்போ இவ்வளவா? எதில் விலை குறைவு?

Jio vs Airtel vs Vi: சமீபத்தில் ஜியோ, ஏர்டெல், Vi உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் அனைத்து பிளான்களின் விலையையும் உயர்த்தி உள்ள நிலையில், மூன்றிலும் Data Add-On திட்டங்களின் விலை நிலவரத்தை இங்கு காணலாம். 

இந்த Data Add-On திட்டமானது, அடிப்படை காலிங், டேட்டா பிளான்கள் இருந்தால் மட்டுமே கூடுதல் தேவைக்காக இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

 

1 /8

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் தங்களின் ரீசார்ஜ் பிளான்களின் விலையை சுமார் 25% வரை உயர்த்தி உள்ளன.   

2 /8

கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் இந்த மூன்று நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் சற்று அதிருப்தியில் இருக்கிறார்கள் எனலாம்.   

3 /8

குறிப்பாக, ஜியோ நிறுவனம் அனைத்து பிளான்களுக்கும் வரம்பற்ற 5ஜி இணைய சேவையை வழங்கி வந்த நிலையில், இனி தினமும் 2ஜிபி அல்லது அதைவிட அதிக ஜிபி டேட்டா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

4 /8

ஏர்டெல் ஒட்டுமொத்தமாக அதன் விலையை உயர்த்தி உள்ளது. 5ஜி குறித்த தனது அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்ல் ஆகியவை 4ஜி சேவையை மட்டுமே இன்னும் வழங்கி வருகின்றன.   

5 /8

அந்த வகையில் அனைத்து விதமான பிளான்களும் விலையும் உயர்ந்தப்பட்டதால் Data Add-On திட்டங்களின் விலையும் உயர்ந்துள்ளன. 1ஜிபி, 2ஜிபி என தனியாக தனியாக குறைவான விலையில் ரீசார்ஜ் செய்த நிலையில் இதன் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய மூன்றிலும் Data Add-On திட்டங்களின் புதிய விலை நிலவரத்தை இங்கு காணலாம்.  

6 /8

ஜியோ நிறுவனம் 1ஜிபியை முன்பு 15 ரூபாய்க்கு வழங்கிய நிலையில் தற்போது 19 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2ஜிபி 25 ரூபாய்க்கும், 6ஜிபி 61 ரூபாய்க்கும் வழங்கப்பட்ட நிலையில் அது முறையே 29 ரூபாயாகவும், 69 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.   

7 /8

ஏர்டெல் நிறுவனம் முன்பு 1 நாளுக்கு 1ஜிபி டேட்டாவை 19 ரூபாய்க்கு வழங்கி வந்தது. அது தற்போது 22 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 1 நாளுக்கு 2ஜி டேட்டா 29 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 33 ரூபாயாக உயர்ந்துள்ளது. பிளானின் வேலிடிட்டியுடன் வழங்கப்படும் 4ஜிபி Add-on பேக் 65 ரூபாயில் இருந்து தற்பது 77 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.   

8 /8

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் இரண்டு Data Add-on பிளான்களில் விலையை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக, 1 நாளுக்கு 1ஜிபி டேட்டா 19 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 22 ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்னர் 1 நாள் வேலிடிட்டியில் 6ஜிபி டேட்டா 39 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 48 ரூபாயாக உயர்ந்துள்ளது.